full screen background image

‘ஆலகாலம்’ படம் ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகிறது..!

‘ஆலகாலம்’ படம் ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகிறது..!

ஸ்ரீஜெய் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘ஆலகாலம்’.

காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஈஸ்வரிராவ் இப்படத்தில் அம்மாவாக முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். நாயகனாக ஜெயகிருஷ்ணா, நாயகியாக சாந்தினி நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் தீபா, பாபா பாஸ்கர், தங்கதுரை, கோதண்டம், சிசர்மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

இயக்கம் – ஜெயகிருஷ்ணா, இசை – என்.ஆர்.ரகுநந்தன், ஒளிப்பதிவு -கா. சத்தியராஜ், எடிட்டர் -மு. காசி விஸ்வநாதன், கலை இயக்கம் -தேவேந்திரன், நடன இயக்குநர் -பாபா பாஸ்கர், அசார், ஸ்டண்ட் – ராம்குமார், டிசைன்ஸ் – டிசைன் பாய்ண்ட், தயாரிப்பு. ஸ்ரீஜெய் புரொடக்ஷன்ஸ். நிர்வாகத் தயாரிப்பு – மணி தாமோதரன், பத்திரிக்கை தொடர்பு – சக்தி சரவணன்.

இப்படத்தை ஜெயகிருஷ்ணா இயக்கியுள்ளார். தமிழ்த்திரை உலகில் யாரிடமும் உதவியாளராக இல்லாமல் தனது ரசனையின் மூலமும், தேடல் அனுபவத்தின் மூலமும் சினிமாவைக் கற்றுக் கொண்டு களத்தில் இறங்கி உள்ளார் ஜெயகிருஷ்ணா.

காதலும், பாசமும் நிறைந்த ஒரு குடும்பப் படமாக இது உருவாகியுள்ளது. ‘ஆலகாலம்’ என்றால் கொடிய நஞ்சு ஆகும். வஞ்சகம், சூழ்ச்சி, மது, போதை, அடக்குமுறை என்கின்ற விஷம் உலகையே அச்சுருத்திக் கொண்டிருக்கிறது,

இதில் பெரும்பான்மையான மனித இனங்கள் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில். இலட்சியத்தோடு வளர்த்தெடுக்கப்படும் மகன், வெற்றிக்காகப் போராடும் இளைஞன், தன்னம்பிக்கையுடன் கரம் கோர்க்கும் காதலி, இவர்கள் வாழ்க்கையை சூறையாடுகிறது இந்த வஞ்சகம், சூழ்ச்சி எனும் ‘ஆலகாலம்’.

இதில் இருந்து இவர்கள் மீண்டார்களா?.. தாயின் லட்சியம், இளைஞனின் முயற்சி, காதலியின் நம்பிக்கை வெற்றி பெற்றதா என்பதே இந்த ‘ஆலகாலம்’ திரைப்படம் சொல்லும் கதை.

ஆக்சன் செண்டிமெண்ட் நிறைந்த இப்படத்தைப் பார்த்த அனைவரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாகத் படம் பார்த்த தணிக்கைத் துறை அதிகாரிகளும் கணவன், மனைவி, அம்மா, குடும்பம் என்பதையும் தாண்டி நல்ல சமூக நோக்கத்தோடு உருவாகியிருக்கும் ஒரு படமாக இது இருப்பதாகப் பாராட்டியுள்ளனர்.

வரும் ஏப்ரல் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த ‘ஆலகாலம்’ திரைப்படத்தை ஆக்சன் ரியாக்ஷன் நிறுவனம் சார்பில் ஜெனிஷ் வெளியிடுகிறார்.

Our Score