ஸ்ரீஜெய் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘ஆலகாலம்’.
நாயகனாக ஜெயகிருஷ்ணாவும், நாயகியாக சாந்தினியும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தீபா, பாபா பாஸ்கர், தங்கதுரை, கோதண்டம், சிசர் மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
‘காலா’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஈஸ்வரிராவ், இப்படத்தில் நாயகனுக்கு அம்மாவாக முதன்மையான வேடத்தில் நடித்துள்ளார்.
இயக்கம் – ஜெயகிருஷ்ணா, இசை – என்.ஆர்.ரகுநந்தன், ஒளிப்பதிவு -கா.சத்தியராஜ், படத்தொகுப்பு -மு.காசிவிஸ்வநாதன், கலை இயக்கம் – தேவேந்திரன், நடன இயக்கம் – பாபா பாஸ்கர், அசார், சண்டை இயக்கம் – ராம்குமார், வடிவமைப்பு –டிசைன் பாய்ண்ட், தயாரிப்பு . ஸ்ரீ ஜெய் புரொடக்ஷன்ஸ், நிர்வாகத் தயாரிப்பு – மணி தாமோதரன், பத்திரிக்கை தொடர்பு – சக்தி சரவணன்.
இப்படத்தை அறிமுக இயக்குநரான ஜெயகிருஷ்ணா இயக்கியுள்ளார். தமிழ்த்திரை உலகில் யாரிடமும் உதவியாளராக இல்லாமல் இயக்குநர்களான லோகேஷ் கனகராஜ், உறியடி விஜயகுமார், கார்த்திக் நரேன் போன்ற முத்திரை பதித்த இயக்குநர்கள் வரிசையில், தனது ரசனையின் மூலமும், தேடல் அனுபவத்தின் மூலமும் சினிமாவைக் கற்றுக் கொண்டு களத்தில் இறங்கி உள்ளார் இயக்குநர் ஜெயகிருஷ்ணா.
காதலும் பாசமும் நிறைந்த ஒரு குடும்பப் படமாக உருவாகியுள்ளது. ‘ஆலகாலம்’ என்றால் கொடிய நஞ்சு ஆகும். வஞ்சகம், சூழ்ச்சி, மது, போதை, அடக்குமுறை என்கின்ற விஷங்கள் தற்போதைய உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.
இந்த விஷங்களின் வீரியத்தால் மனித இனங்கள் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், ஒரு இலட்சியத்தோடு வளர்த்தெடுக்கப்படும் மகன், வெற்றிக்காகப் போராடும் இளைஞன், தன்னம்பிக்கையுடன் கரம் கோர்க்கும் காதலி, இவர்கள் வாழ்க்கையை சூறையாடுகிறது வஞ்சகம், சூழ்ச்சி எனும் ‘ஆலகாலம்’…!
இதில் இருந்து இவர்கள் மீண்டார்களா?.. தாயின் லட்சியம், இளைஞனின் முயற்சி, காதலியின் நம்பிக்கை வெற்றி பெற்றதா என்பதே இந்த ‘ஆலகாலம்’ திரைப்படம் சொல்லும் கதை.
ஆக்சன், செண்டிமெண்ட் நிறைந்த இப்படத்தைப் பார்த்த அனைவரும் பாராட்டி வருகின்றனர். கணவன், மனைவி, அம்மா, குடும்பம் என்பதையும் தாண்டி நல்ல சமூக நோக்கத்தோடு உருவாகியிருக்கும் ஒரு படமாக இருப்பதாகப் படம் பார்த்த தணிக்கைக் குழுவினரும் பாராட்டியுள்ளனர்.
வரும் ஏப்ரல் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த ‘ஆலகாலம்’ படத்தை ஆக்சன் ரியாக்ஷன் நிறுவனத்தின் சார்பில் ஜெனிஷ் வெளியிடுகிறார்.









