full screen background image

கமல்ஹாசனின் 237-வது படத்தை சண்டை இயக்குநர்கள் அன்பறிவ் இயக்குகிறார்கள்..!

கமல்ஹாசனின் 237-வது படத்தை சண்டை இயக்குநர்கள் அன்பறிவ் இயக்குகிறார்கள்..!

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் தனது 55-ஆவது தயாரிப்பாக KH237 திரைப்படத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் சார்பாக இந்தப் படத்தை கமல்ஹாசனும் ஆர்.மகேந்திரனும் தயாரிக்கிறார்கள்.

உலக நாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இந்தத் திரைப்படத்தின் மூலம், ஸ்டண்ட் சகோதரர்களான அன்பறிவ் இயக்குநர்களாக அறிமுகமாகிறார்கள்.

இந்தியத் திரையுலகின் ஸ்டண்ட் பிரிவில், அன்பறிவ் முக்கிய இடம் வகிக்கிறார்கள். ஸ்டண்ட் இயக்குனர் என்ற இடத்திலிருந்து அவர்கள் திரைப்பட இயக்குநர்களாக முன்னேறுவது அவர்களுடைய அர்ப்பணிப்புக்கும், திறமைக்குமான நற்சான்று.

KH237 திரைப்படத்தின் வழியாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனத்தின் சிறந்த திரைப்படப் பங்களிப்பு, இன்னும் மேம்படும். அன்பு மணியும், அறிவு மணியும் இந்தப் படத்தை இயக்குவதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.

திரைப்பட உருவாக்கத்தில் இதன் மூலம் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது. ஸ்டண்ட் காட்சிகளை நேர்த்தியாக உருவாக்குவதற்காகக் கடுமையாக உழைக்கும் அன்பறிவ் இணையின் அர்ப்பணிப்பு இந்தத் திரைப்படத்திலும் நிச்சயம் வெளிப்படும்.

சிறந்த நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான கமல்ஹாசன் இது குறித்துப் பேசும்போது, “திறமைசாலிகளாக அறியப்படும் இருவர் இயக்குநராக KH237 படத்தில் அவதாரம் எடுப்பதில் பெருமைப்படுகிறேன். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் சார்பாக அவர்களை வரவேற்கிறேன்…” என்றார்.

ஸ்டண்ட் இயக்குநர்களான அன்பறிவ் பேசும்போது, “அற்புதங்கள் நிகழ்கின்றன. உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களை இயக்கும் மிகப் பெரிய வாய்ப்பு அமைந்தது கனவைப் போலிருக்கிறது” என்றார்கள்.

அதிரடிக் காட்சிகள் நிறைந்த படமாக KH237 ரசிகர்களுக்கும், திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் ஓர் அற்புதமான காட்சியனுபவமாக இருக்கும் என்பது உறுதி.

உலக நாயகன் கமல்ஹாசன் ரசிகர்களுக்கு இது ஒரு விருந்தாக அமையும். புதிய இயக்குநர்களின் திறமையைக் கண்டறிந்து, திரைப்படங்களைத் தயாரிப்பதன் மூலம் உலக நாயகன் அவர்களை மிகச் சிறந்த இயக்குநர்களாக உருவாக்குகிறார்.

மிகுந்த உற்சாகத்துடனும், மிகப் பெரிய எதிர்பார்ப்புடனும், இரட்டையர்கள் அன்பறிவ் உலக ராநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து, இயக்குனர்களாகத் தங்கள் திறமையை வெளிப்படுத்தக் காத்திருக்கிறார்கள். மிகச் சிறந்த படங்களை உருவாக்கும் இலக்குக்கான நற்சான்றாக இந்தப் படம் அமையும்.

KH237 தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மற்றும் கன்னடத்தில் 2025-ஆம் ஆண்டில் வெளியாகும்.

Our Score