சினிமாக்காரன் என்ற புதிய பட தயாரிப்பு நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் S. வினோத்குமார் தயாரிக்கும் புதிய படத்தில் ‘குட் நைட்’ மணிகண்டன் நாயகனாக நடிக்கிறார்.
இந்தப் படத்தில் மணிகண்டனுடன், சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன், தனம், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர்.
இயக்கம் – ராஜேஷ்வர் காளிசாமி, கதை – பிரசன்னா பாலச்சந்திரன் & ராஜேஷ்வர் காளிசாமி, திரைக்கதை & வசனம்: பிரசன்னா பாலச்சந்திரன், தயாரிப்பு நிறுவனம் – சினிமாக்காரன், தயாரிப்பு – செ.வினோத்குமார், ஒளிப்பதிவு – சுஜித் சுப்ரமணியம், இசை – வைசாக், படத் தொகுப்பு – கண்ணன், கலை இயக்கம் – சுரேஷ்குமார், ஒலிப்பதிவு – விக்ரமன், சண்டை இயக்கம் – அபிஷேக் ஸ்ரீனிவாஸ், உடை வடிவமைப்பு – மீரா, விளம்பர வடிவமைப்பு – இளங்கவின், பத்திரிக்கை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி ஒன்.
ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்து இளைஞன் தன்மானத்திற்காகவும், தன் குடும்பத்தின் நலனுக்காகவும் எதிர்கொள்ளும் சவால்களும் சாகசங்களுமே இத்திரைப்படத்தின் மையக் கருவாகும்.
இக்கதை நம் குடும்பங்களில் நடக்கக் கூடிய நிகழ்வுகளின் அடிப்படையில் நகைச்சுவையும், சுவாரசியங்களும் நிறைந்ததாக அமைந்திருப்பதால் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக அமையும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
மணிகண்டன் சமீபத்தில் வெளியான ‘குட் நைட்’ திரைப்படத்தில் எதார்த்தமாக நடித்து மக்களை கவர்ந்த நிலையில், இத்திரைப்படத்திலும் தன்னுடைய எதார்த்த நடிப்பால் அசத்துவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
இத்திரைப்படம் முழுவதும் கோயம்புத்தூரில் படமாக்கப்பட இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.










