full screen background image

கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தைப் பேசும் படமா இந்த ‘பாய் – Sleeper Cell’ திரைப்படம்..?

கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தைப் பேசும் படமா இந்த ‘பாய் – Sleeper Cell’ திரைப்படம்..?

‘பாய் – Sleeper Cell’ படத்தின் Trailer இணையத் தளங்களில் வெளியாகி சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

“மூன்று இடங்களில் bomb blast உறுதி” என்ற வசனத்தைக் கொண்டு Church மற்றும் கோவில்  visual – உடன் trailer ஆரம்பம் ஆகிறது.

“எங்க பாய் சொல்வார் மதம் ஒரு அரசியல் கருவின்னு” என்ற வசனம் (அப்பொழுது மூன்று மதங்களின் பெயர் paper – ல் எழுதியிருப்பது)

நான் மதம் மாறணுமா?

இஸ்லாமிய பெண் ஒருவர் தொழுகும்போது மூன்று பேர் வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருப்பது.

பிடித்த பெண்ணை கல்யாணம் செய்ய மதம் மாற்றம் போன்ற வசனங்களைக் கொண்டு விறுவிறுப்பான காட்சிகளுடன் Trailer சுவாரஸ்யமாக இருக்க…

இறுதியில் Maruthi car- ல் குண்டு வெடிப்பு அதில் 1998- ல் கோவையில் நடந்த குண்டு வெடிப்பை சம்பந்தப்படுத்தி பேசியிருக்கும் வசனம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Maruthi car குண்டு வெடிப்பு சமீபத்தில் கோவையில் நடந்த குண்டு வெடிப்பை நினைவூட்டுகிறது.

இது ஒருபுறம் இருக்க.. ஒட்டு மொத்த இந்தியாவையும் புரட்டிப் போட்ட 1998 கோவை குண்டு வெடிப்பு இந்த இரண்டு சம்பவத்தையும் இணைத்து உருவாகியிருக்கும் படமா இந்த ‘பாய்’ திரைப்படம் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது?

‘காஷ்மீர் பைல்ஸ்’ மற்றும் ‘தி கேரளா ஸ்டோரீஸ்’ போன்ற சர்ச்சைக்குரிய படங்களின் வரிசையில் இந்த Bhai – Sleeper cell’ திரைப்படமும் இருக்கும் என்ற பரவலான பேச்சும் மக்களிடையே வலம் வருகிறது.

இத்தனை சர்ச்சை கேள்விகள் இருந்தாலும்… ‘Bhai – Sleeper Cell’ படத்தின் Trailer ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.

இந்த பாய் – sleeper cell’ திரைப்படம் வரும் டிசம்பர் 28-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

Our Score