full screen background image

காதல் கதையில் உருவாகியிருக்கும் பீல் குட் மூவிதான் ‘ஜோ’ திரைப்படம்

காதல் கதையில் உருவாகியிருக்கும் பீல் குட் மூவிதான் ‘ஜோ’ திரைப்படம்

அரிதாக வெகு சில நடிகர்கள் மட்டுமே, ’நம் பக்கத்து வீட்டு பையன்’ என்ற உணர்வைக் கொடுத்து நம் வீட்டில் ஒருவராக ஏற்றுக் கொள்வார்கள். அந்த வகையில், நிறைய நடிகர்கள் தமிழ்த் திரையுலகத்திற்குள் நுழைந்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். இதில் நடிகர் ரியோ ராஜூம் ஒருவர்.

தொலைக்காட்சியில் காமெடி எண்டர்டெயினராக பார்வையாளர்களை மகிழ்வித்தவர் தற்போது அழகான ஃபீல் குட் ரொமாண்டிக் எண்டர்டெயினரான ‘ஜோ’ படத்துடன் வருகிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான ஹரிஹரன் ராம் இயக்க, விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர். டி. அருளானந்து தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் மாளவிகா மனோஜ் என்ற மலையாள புதுமுகம் நாயகியாக அறிமுகமாகிறார். மேலும் இன்னொரு நாயகியாக பாவ்யா த்ரிகாவும் நடித்துள்ளார். மேலும் சார்லி, அன்புதாசன், ஏகன், கெவின் பெல்சன், வி.கே.விக்னேஷ் கண்ணா, இளங்கோ குமணன், வி.ஜே.ராகேஷ், ஜெயக்குமார் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இசை – ‘பேச்சுலர்’ படப் புகழ் சித்துகுமார், ஒளிப்பதிவு – ராகுல் கே.ஜி.விக்னேஷ், படத் தொகுப்பு – வருண் கே.ஜி., கலை இயக்கம் – ABR, சண்டைப் பயிற்சி இயக்கம் – பவர் பாண்டியன், தயாரிப்பு கட்டுப்பாடு – எல்.எம்.தனசேகர், ஒளிப்பதிவு – அபு & சால்ஸ், பாடல்கள் = வைசாக் விக்னேஷ் ராமகிருஷ்ணா, ஆடை வடிவமைப்பு – ஸ்ரீதேவி கோபாலகிருஷ்ணன், பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா- ரேகா D’One.

தமிழக – கேரள என்னும் இரு மாநில எல்லைகளுக்கு இடையேயான கதைக் களத்தில் நிகழும் காதலை மையப்படுத்தி தயாராகியுள்ளது இந்தப் படம்.

இத்திரைப்படம் வரும் நவம்பர் 24-ம் தேதியன்று திரைக்கு வருகிறது. இதையொட்டி படக் குழுவினர் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் நாயகனான நடிகர் ரியோ ராஜ் படம் குறித்துப் பேசும்போது, “இந்த ‘ஜோ’ திரைப்படம் எங்கள் நண்பர்கள் குழுவால் உருவாக்கப்பட்ட எங்கள் ஒட்டு மொத்த அணியின் அடையாளம் மற்றும் முகவரி. மிகுந்த ஈடுபாட்டுடனும், ஆர்வத்துடனும் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம்.

கதாநாயகனான ‘ஜோ’வின் பள்ளிக் காலத்தில் இருந்து அவனது திருமணத்திற்குப் பிந்தைய நாட்கள் வரையிலான காதல் பயணத்தை மையமாக வைத்து இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது.

படத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதிக்காக நான் நீண்ட முடி மற்றும் தாடியுடன் வித்தியாசமான தோற்றத்தில் இருப்பேன். இதன் காரணமாகவே, வேறு எந்த புராஜெக்ட்டிலும் கடந்த இரண்டு வருடங்களாக என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது.

இயக்குநர் ஹரிஹரன் என்னுடைய முதல் படத்தின் இயக்குநர். எங்களுக்குள் நான்கு வருட நட்பு இருக்கிறது. ஒரு அணியாக எங்களுடைய சிறந்ததைக் கொடுத்திருக்கிறோம்.

இதன் மொத்தப் படப்பிடிப்பும் வெறும் 37 நாட்களில் முடிவடைந்துள்ளது. இதற்கு தயாரிப்பாளரின் ஒத்துழைப்புதான் முழு முதற் காரணம். இந்த ‘ஜோ’ படம் நூறு சதவீதம் பார்வையாளகளுக்கு ஒரு ஃபீல் குட் லவ் ஸ்டோரியாக இருக்கும். படத்தின் டீசர் அந்த உணர்வை பார்வையாளர்களுக்குள் நிச்சயம் கடத்தும்…” என்றார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”இத்திரைப்படம் காதலை மையப்படுத்திய படைப்பு என்றாலும், நாயகனின் 17 வயது முதல் 27 வயது வரையிலான மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் சம்பவங்களை உணர்வுபூர்வமாக விவரிக்கும்..” என்றார்.

இந்த ’ஜோ’ திரைப்படத்தின் டீஸர் வெளியானபோது ரசிகர்கள் மத்தியில் படம் பற்றிய பாசிட்டிவான வைப்ரேஷன் உருவாக்கிவிட்டது. வண்ணமயமான மற்றும் நேர்த்தியாக வழங்கப்பட்ட இதன் விஷூவல் புரோமோவான ‘உருகி உருகி’ என்ற டிராக் அனைவரையும் ‘ஜோ’வின் உலகிற்குள் அழைத்து சென்றுவிட்டது.

படத்திற்கான புரோமோஷனல் பாடலாக மியூசிக்கல் ஜீனியஸ் யுவன் ஷங்கர் ராஜாவே திரையில் தோன்றி பாடியிருக்கும்  ‘ஒரே கனா’ பாடல் காட்சியையும் வெளியிட்டு அதகளப்படுத்தியுள்ளது படக் குழு. இது இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டுவதாக அமைந்துள்ளது.

இன்னொரு இசையமைப்பாளர் பாடலில் யுவன் ஷங்கர் ராஜா தோன்றுவது இதுவே முதல்முறையாகும்.

‘அடிபொலி’ என்ற இண்டி பாடல், ’பேச்சுலர்’ படத்தில் இருந்து ‘அடியே’ மற்றும் இந்தப் படத்தில் இருந்து ஏற்கெனவே வெளியான ‘உருகி உருகி’ போன்ற பெப்பி பாடல்களை கொடுத்த சித்து குமார்தான் இந்த ‘ஒரே கனா’ பாடலுக்கும் இசையமைத்துள்ளார். 

அஜித் குமாரின் ’துணிவு’ படத்தில் ‘சில்லா சில்லா’ என்ற சார்ட் பஸ்டர் ஹிட் பாடலை எழுதிய வைசாக்குதான் இந்த ‘ஒரே கனா’ பாடலை எழுதியுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா போன்ற ஒரு மியூசிக்கல் லெஜெண்ட் தங்களது படத்தில் இருப்பது படத்தின் எதிர்ப்பார்ப்பையும் மதிப்பையும் உயர்த்தும் என்று ‘ஜோ’ படக் குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்னை, ராமேஸ்வரம், ராமநாதபுரம், பொள்ளாச்சி, பாலக்காடு மற்றும் திண்டுக்கல் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.

முதலாமடை ரயில் நிலையத்திலும் படமாக்கப்பட்டுள்ளது என்பது இதில் உள்ள சுவாரஸ்யமான உண்மை. நடிகர் கமல்ஹாசனின் ‘அன்பே சிவம்’ படத்திற்கு அடுத்து பல வருடங்கள் கழித்து இந்த ‘ஜோ’ திரைப்படம் மட்டும்தான், இந்த லொகேஷனில் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘பிளான் பண்ணி பண்ணனும்’ ஆகிய படங்களுக்குப் பிறகு நடிகர்  ரியோ ராஜ் கதையின் நாயகனாக நடித்திருப்பதால், இப்படத்திற்கு அவருடைய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. 

மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘ஜோ’ திரைப்படம் உலகம் முழுவதும் வரும் நவம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Our Score