தயாரிப்பாளர் ஏ.ஆர்.ஜாபர் சாதிக்கின் ஜே.எஸ்.எம்.பிக்சர்ஸ் மற்றும் இர்பான் மாலிக்கின் எம்பரர் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் ஒரு புதிய படத்தை இணைந்து தயாரித்துள்ளன.
இந்தப் படத்தில் வசந்த் ரவி நாயகனாக நடித்துள்ளார். இது இவர் நடிக்கும் 7-வது திரைப்படமாகும். மேலும் இந்தப் படத்தில் சுனில், கல்யாண் மாஸ்டர், மெஹ்ரீன் பிர்சாதா மற்றும் அனிகா சுரேந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
சபரிஷ் நந்தா இயக்கத்தில், அஜ்மல் தஹ்சீன் இசையில், பிரபு ராகவ் ஒளிப்பதிவில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை 05-ம் தேதியன்று துவங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் 11-ம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக முடிவடைந்தது.
ஒரு விறுவிறுப்பான கிரைம் திரில்லர் படமாக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் படத்தின் தலைப்பு, போஸ்டர்கள், டீசர், டிரைலர் மற்றும் இதர அப்டேட்களை இன்னும் சில நாட்களில் தயாரிப்புக் குழுவினர் வெளியிட இருக்கிறார்கள்.












