full screen background image

‘கிக்’ படத்தில் பாடகராகியிருக்கும் நடிகர் சந்தானம்..!

‘கிக்’ படத்தில் பாடகராகியிருக்கும் நடிகர் சந்தானம்..!

பிரபல கன்னட இயக்குநரான பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடித்திருக்கும் தமிழ்ப் படம் கிக்’.

இப்படத்தில், தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, ஒய்.ஜி.மகேந்திரா, மொட்டை ராஜேந்திரன், ஷகிலா, ராகிணி திவேதி, வையாபுரி, சிசர் மனோகர், கிங்காங், முத்துக்காளை, சேஷு, கூல் சுரேஷ், அந்தோணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – பிரசாந்த் ராஜ், தயாரிப்பு – நவீன் ராஜ், தயாரிப்பு மேற்பார்வை – பாக்யா, ஒளிப்பதிவு – சுதாகர் ராஜ், இசை – அர்ஜூன் ஜன்யா, பத்திரிகை தொடர்பு – ஜான்ஸன்.

சிறந்த நகைச்சுவை படமாக உருவாகியுள்ளது இந்த கிக்’ படம். டாம்-ஜெர்ரி மாதிரியான உறவில் இருக்கிறார்கள். ஹீரோவும் ஹீரோயினும். விளம்பர நிறுவனத்தில் பணிபுரிகிற சந்தானம் எப்படியாவது கொஞ்சம் குறுக்கு வழியில்கூட போய் வெற்றியை அடைய துடிக்கிறவர். ஹீரோயின் தான்யா ஹோப், நேர்மையாய் விளம்பரத் துறையில் முன்னேற துடிப்பவர். இரண்டு பேரும் எலியும், பூனையுமாக மோதி கொள்வதுதான் கதை.

நடிகர் சந்தானத்தின் நகைச்சுவையை விரும்பும் மொத்த ரசிகர்களுக்குமான படம் இது. எமோஷன், சென்டிமென்ட், டிராமா அனைத்தும் கலந்து ஜனரஞ்சகமான படமாக இது உருவாகியுள்ளது.

இப்படத்தின் முதல் பாடலுக்கான விளம்பர வீடியோ இன்று வெளியாகியுள்ளது. அதில் சாட்டர்டே இஸ் கம்மிங்கு’(Saturday is cominguu) என்று ஆரம்பிக்கும் பாடலை முதல்முறையாக நடிகர் சந்தானம் சொந்தக் குரலில் பாடியிருக்கிறார். இப்பாடலை கவிஞர் விவேகா எழுதியிருக்கிறார்.

இப்பாடலின் முழு வரிகளுக்கான வீடியோ அக்டோபர் 10-ம் தேதி மாலை 06.03 மணிக்கு வெளியாகவுள்ளது.

Our Score