full screen background image

விஜய்-ஆர்.ஜே.பாலாஜி கூட்டணியில் புதிய படம்..?

விஜய்-ஆர்.ஜே.பாலாஜி கூட்டணியில் புதிய படம்..?

நடிகர் விஜய்க்கு கதை சொல்லியிருப்பதாக நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் திரைக்கு வந்து மிகப் பெரிய வசூலை வாரிக் குவித்திருக்கும் வீட்ல விசேஷம்’ படத்தின் வெற்றி விழாவில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி பேசும்போது இதைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஆர்.ஜே.பாலாஜி பேசும்போது, “இனி வருங்காலங்களில் திரைப்படங்களை இயக்கவும், நல்ல கதைகளில் நடிக்கவும் எண்ணியுள்ளேன்.

சமீபத்தில் தளபதி விஜய் அவர்களை சந்தித்து ஒரு 40 நிமிட கதையை அவரிடம் சொன்னேன். விஜய் கதை கேட்டு முடித்த பின் அசந்து போனார். “மீதி கதையை எப்ப சொல்வீங்க..?” என்று கேட்டார். நான் “அதுக்கு ஆறு மாதம் முதல் ஒரு வருடம்வரை நேரம் வேண்டும்”ன்னு சொன்னேன்  உடனேயே “நல்லா டெவலப் பண்ணிட்டு வாங்க”ன்னு சொல்லி அனுப்பினார்..” என்றார் ஆர்.ஜே.பாலாஜி.

ஆக, வரும்காலத்தில் விஜய், ஆர்.ஜே.பாலாஜி கூட்டணி உறுதியாகும் என்றே தெரிகிறது.

Our Score