full screen background image

3 கதாப்பாத்திரங்கள் மட்டுமே நடித்திருக்கும் 10 நிமிட சிங்கிள் ஷாட் குறும் படம்..!

3 கதாப்பாத்திரங்கள் மட்டுமே நடித்திருக்கும் 10 நிமிட சிங்கிள் ஷாட் குறும் படம்..!

நடிகர் ஆதேஷ் பாலா மற்றும் அவரின் குழுவினர்கள் சேர்ந்து 3 கதாப்பாத்திரங்கள் மட்டுமே 10 நிமிட நேரத்தில் சிங்கிள் ஷாட்டில் நடித்திருக்கும் அந்த இரவில்’ என்ற குறும் படத்தை உருவாக்கியுள்ளனர்.

10 நிமிட நேரத்தில் சிங்கிள் சாட் படமாக, மூன்று கதாபாத்திரங்களிலும் ஒரே நடிகர் ஏற்று நடித்திருப்பது இந்தக் குறும் படத்தின் சிறப்பம்சமாகும்.

இந்தக் குறும் படத்தில் ஒரே நாயகனாக நடித்திருக்கும் ஆதேஷ் பாலா பல திரைப்படங்களில், தொலைக்காட்சி தொடர்களில் நடித்த அனுபவம் கொண்டவர்.

அந்த இரவில்’ குறும் படத்திற்கு இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம் இசையமைத்திருக்கிறார். இவர் தமயந்தி’, மற்றும் ‘அழகிய தீயே’ போன்ற படங்களுக்கு இசையமைத்தவர்.  

ஒளிப்பதிவு – சுபாஷ் அலெக்சாண்டர், படத் தொகுப்பு மற்றும் டிஸைனர் – அன்பு, ஒலி வடிவமைப்பு – சரவணன் ராமச்சந்திரன், கலை இயக்கம் – கலை மூவிஷ்.

இந்தக் குறும் படத்தின் போஸ்டரை 50 திரையுலக நட்சத்திரங்கள் இணைந்து ஒரே நேரத்தில் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#அந்தஇரவில் – #AndhaIravil நிச்சயமாக புதிய மைல் கல்லாக தமிழ் சினிமாவிற்கு அமையவிருக்கிறது. இந்த குறும் படம் பல விருதுகள் மற்றும் பல மேடைகளுக்குக் கூட்டிக் கொண்டு போகும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

Our Score