full screen background image

பார்வைத் திறன் குறைந்த திருமூர்த்தியின் இசைப் பயிற்சிக்கு உதவிய நடிகர் கமல்ஹாசன்

பார்வைத் திறன் குறைந்த திருமூர்த்தியின் இசைப் பயிற்சிக்கு உதவிய நடிகர் கமல்ஹாசன்

உலக நாயகன்’ கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் உலகெங்கும் வெற்றி நடைபோட்டு வருகிறது.

இந்தப் படத்தில் கமல்ஹாசனே எழுதி பாடிய பத்தல பத்தல’ என்ற பாடல் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி இசை ரசிகர்களிடம் மிகப் பெரிய ஹிட் ஆகியுள்ளது.

இந்த நேரத்தில் தமிழகத்தை சேர்ந்த பார்வைத் திறன் இல்லாத மாற்றுத் திறனாளியான திருமூர்த்தி என்பவர் இந்தப் பாடலை தான் பாடி அதை இணையத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்றைக்கு வைரலானது.

இதையடுத்து மாற்றுத் திறனாளியான திருமூர்த்தியை நடிகர் கமல்ஹாசன் இன்று நேரில் வரவழைத்துப் பாராட்டினார்.

திருமூர்த்தியின் விருப்பம் இசைக் கலைஞர் ஆக வேண்டும் என்பதைப் புரிந்து கொண்ட கமல்ஹாசன், அதற்கு உரிய திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று திருமூர்த்திக்கு ஆலோசனை வழங்கினார்.

அத்தோடு நின்று விடாமல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் திருமூர்த்தி குறித்துப் பேசினார். இதையடுத்து திருமூர்த்தியை தனது KM Music Conservatory இசைப் பள்ளியில் சேர்த்துக் கொள்வதாக ஏ.ஆர்.ரஹ்மான் உறுதியளித்துள்ளார்.

திருமூர்த்தி இசை கற்றுக் கொள்வதற்கான முழுச் செலவையும் தானே ஏற்றுக் கொள்கிறேன் எனவும் நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

Our Score