full screen background image

இளம் பெண் தேடிய சுதந்திரத்தின் விளைவைப் பற்றிப் பேசும் ‘திவ்யா’ திரைப்படம்

இளம் பெண் தேடிய சுதந்திரத்தின் விளைவைப் பற்றிப் பேசும் ‘திவ்யா’ திரைப்படம்

நியான் ஸீ ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீஜேஷ் வல்சன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘திவ்யா’.

இந்தப் படத்தில் சாஸ்வி பாலா, மிதுன், சம்பத் ராம், மேத்யூ வர்க்கீஸ், பிரவின், அகில் கிருஷ்ணஜித் முருகன் ஆகியோர் நடித்துள்ளனர்.

விபின் ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ரெஜிமோன் இசையமைப்பில் பாடல்கள், மற்றும் வசனத்தை முருகன் மந்திரம் எழுதி இருக்கிறார். அறிமுக இயக்குநர் சனீஷ் சுகுமாரன் இயக்கிருக்கிறார்.

ஆரம்பம் முதல் கடைசிவரையிலும் படம் பார்ப்பவர்களை பரபரப்பாக வைத்திருக்கும் இன்வெஷ்டிகேட்டிவ் த்ரில்லர்தான் இந்த திவ்யா’ திரைப்படம்.

புதுப்புது இடங்களுக்குப் போக வேண்டும்… இதுவரை சந்திக்காத மனிதர்களுடன் பழக வேண்டும்… என்று தன்னந்தனியாகவே சுதந்திரப் பறவையாக சுற்றித் திரியும் இளம் பெண் திவ்யா.

திவ்யாவும் அவளது நண்பனும் இதுவரை பார்க்காத ஒரு இடத்திற்கு பயணம் செய்கிறார்கள். அறிமுகமில்லாத இடம், அறிமுகமில்லாத மனிதர்கள்… அப்போது நடக்கும் எதிர்பாராத ஒரு சம்பவம்… அது எந்த இடம்.. அது என்ன சம்பவம்… அந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பதுதான், திவ்யா’ படத்தின் கதை.

வழக்கமான பாணியில் இல்லாது, மிக வித்தியாசமான திரைக்கதையுடன் உருவாகியுள்ள இந்த திவ்யா’ படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

விரைவில் திவ்யா’ படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெயிலர் வெளியாக இருக்கிறது.

Our Score