சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’.
இப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகளின் கேரக்டர்கள் குறித்த அறிவிப்பை கடந்த சில நாட்களாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
முதல் கட்டமாக ‘அனுஷா’ என்ற கேரக்டரில் ராஷி கண்ணா நடித்து வருவதாக வீடியோ வெளியிட்டனர். இவர் தனுஷின் பள்ளி தோழியாக நடித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து ‘கிராமத்து தென்றல்’ ரஞ்சனி என்ற கேரக்டரில் பிரியா பவானி சங்கர் நடித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.
‘சீனியர் திருச்சிற்றம்பலம்’ கேரக்டரில் இயக்குநர் பாரதிராஜா, ‘இன்ஸ்பெக்டர் நீலகண்டன்’ கேரக்டரில் பிரகாஷ்ராஜ், தனுஷின் தோழி ‘ஷோபனா’ என்ற கேரக்டரில் நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருவதாகவும் ஒவ்வொரு வீடியோவாக அறிவித்தனர்.
இதனை அடுத்து தனுஷின் கேரக்டர் எப்போது வெளிவரும் என தனுஷ் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் ’திருச்சிற்றம்பலம்’ கேரக்டரில் தான் தனுஷ் நடித்து வருகிறார் என்ற வீடியோ ஒன்றையும் வெளியிட்டனர்.
அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கியிருக்கிறார்.
இந்த ‘திருச்சிற்றம்பலம்’ படம் வரும் ஆகஸ்ட் 18-ம் தேதி தியேட்டர்களில் வெளியாக இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளனது.