full screen background image

விமல் நாயகனாக நடிக்கும் ‘விலங்கு’ வெப் சீரீஸ்..!

விமல் நாயகனாக நடிக்கும் ‘விலங்கு’ வெப் சீரீஸ்..!

பல்வேறு படங்களில் நாயகனாக நடித்து வரும் நடிகர் விமல் திடீரென்று வெப் சீரீஸில் நாயகனாக நடித்திருக்கிறார்.

இந்த வெப் சீரீஸ் ஜி-5 ஓடிடி தளத்திற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஜீ-5 ஓடிடி தளத்தில் வெளியான ஆட்டோ சங்கர்’, ‘பிங்கர் டிப்’, ‘க.பெ.ரணசிங்கம்’, ‘மலேஷியா டு அம்னீஷியா’, ‘டிக்கிலோனா’, ‘விநோதய சித்தம்’, ‘பிளட் மணி’, ‘முதல் நீ முடிவும் நீ’ மற்றும் பல ஒரிஜினல் படங்கள், பார்வையாளர்களின் இதயங்களை வென்றுள்ளன.

தற்போது, தனது ரசிகர்களுக்காக இயக்குநர்  பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் விமலின் நடிப்பில் விலங்கு’ என்ற ஒரிஜினல் வெப் சீரீஸை தயாரித்துள்ளது ஜீ-5 ஓடிடி தளம்.

எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மதன் இந்த வெப் சீரீஸை தயாரித்துள்ளார்.

விமல் நாயகனாக நடித்துள்ள இந்த வெப் சீரீஸில் இனியா, முனிஷ்காந்த், பால சரவணன், RNR மனோகர், ரேஷ்மா ஆகியோருடன் பல முன்னணி நட்சத்திர நடிகர், நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.

அஜீஷ் இசையமைக்க, கணேஷ் படத் தொகுப்பு செய்ய, ஒளிப்பதிவை தினேஷ் புருஷோத்தமன் கையாண்டுள்ளார், கலை இயக்கம் – G.துரைராஜ். இந்த விலங்கு’ தொடரை இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார்.

7-எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரீஸ், ஒரு புலனாய்வு தொடராக க்ரைம் ஜானரில் உருவாகியுள்ளது,

இதன் கதை திருச்சியில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. எளிய காவலர்களின் வாழ்க்கையை சொல்வதோடு, அவர்களின் உணர்வுபூர்வமான பக்கத்தையும் சொல்வதாக அமைந்துள்ளது. ஒரு மர்மமான வழக்கை, சப்-இன்ஸ்பெக்டரான விமல் விசாரிக்க ஆரம்பிக்கிறார். அதில் ஏற்படும் திருப்பங்களே இந்த தொடர்.

ஜீ5 ஒரிஜினல் தொடரான விலங்கு’ வரும் பிப்ரவரி 18 முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

Our Score