இன்றைய காலக்கட்டங்களில் திரையுலகத்தின் வளர்ச்சிக்கு சோஷியல் மீடியாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நடிகர், நடிகைகள் திரைப்படங்களையும் தாண்டி தங்களை ரசிகர்களிடத்தில் கொண்டு போய் சேர்ப்பிக்க சோஷியல் மீடியாக்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
அந்த வரிசையில் தனது ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கிறார் வளர்ந்து வரும் நடிகையான தர்ஷா குப்தா. ‘குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டியெங்கும் பாமர மக்கள்வரை சென்று சேர்ந்தவர் தர்ஷா குப்தா.
இவர் தற்போது, மெகா ஹிட் திரைப்படமான ‘திரெளபதி’ படத்தின் இயக்குநரான மோகன்.ஜி.யின் அடுத்த படமான ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இப்போதே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு கோடம்பாக்கத்தில் கூடியிருக்கிறது.
‘ஸ்லிம் நயன்தாரா’ என்ற பட்டப் பெயருடன் தற்போது வலம் வந்து கொண்டிருக்கும் தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ஃபாலோயர்ஸ் வந்ததை தொடர்ந்து, சென்னையிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் தனது ரசிகர்களோடு விழா கொண்டாடியிருக்கிறார்.
எல்லாஞ் சரி.. இந்த ‘ஸ்லிம் நயன்தாரா’ என்ற படத்தை இந்த அம்மணிக்குக் கொடுத்தது யாராம்..? பட்டம் கொடுத்தவங்க முன்ன, பின்ன நயன்தாராவை பார்த்திருக்காங்களா.. இல்லையாமா..?









