full screen background image

‘க.பெ.ரணசிங்கம்’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ்..!

‘க.பெ.ரணசிங்கம்’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ்..!

சென்னையில் நடைபெற்ற 18-வது சர்வதேச திரைப்பட விழாவில் ‘க/பெ.ரணசிங்கம்’ படத்தில் மிகச் சிறந்த நடிப்பை வழங்கியதற்காக சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.

சென்னை சர்வதேச 18-ஆவது திரைப்பட விழாவின் நிறைவு நாளான நேற்று சிறந்த படங்கள், மற்றும் சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா  நடைபெற்றது.

விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை க/பெ.ரணசிங்கம்’ படத்தில் உணர்ச்சிப்பூர்வமாக நடித்து அனைவரது மனதிலும் நீங்கா இடம் பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இந்த விருதை வழங்கினார்கள்.

ஐஸ்வர்யா ராஜேஷின் கணவராக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருந்த ‘க/பெ.ரணசிங்கம்’ படத்தை விருமாண்டி எழுதி இயக்கி இருந்தார். ஜீ திரையில் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த விருதினைப் பெற்றது குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறும்போது, “உழைப்பிற்கான அங்கீகாரம் உரிய நேரத்தில் கிடைக்கும்போது அது பெரிய மகிழ்ச்சியைத் தரும். அந்த வகையில் இந்த விருதைப் பெற்றது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

க/பெ.ரணசிங்கம்’ படத்தின் ஒட்டு மொத்த டீமிற்கும் என் அன்பான நன்றி. நல்ல நடிகை என்ற அடையாளத்தை எனக்குள் ஊன்றிய ரசிகர்களுக்கு பேரன்பும் பெரும் நன்றியும் உரித்தாகட்டும்…” என்றார்.

Our Score