full screen background image

விமல் – சிங்கம் புலி ஜோடியைத் துரத்தும் பூர்ணா, ஆனந்தராஜ் ஜோடி..!

விமல் – சிங்கம் புலி ஜோடியைத் துரத்தும் பூர்ணா, ஆனந்தராஜ் ஜோடி..!

சாய் புரொடக்சன் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரித்துள்ள படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’.

இந்தப் படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார். மற்றும், ஆனந்தராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலிஸ் அதிகாரி வேடத்தில் நடிகை பூர்ணாவும் நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன், இசை – நடராஜன் சங்கரன், பாடல்கள் –விவேகா, கலை இயக்கம் – வைரபாலன், நடனம் – கந்தாஸ், சண்டை பயிற்சி – ரமேஷ், படத் தொகுப்பு – தினேஷ், தயாரிப்பு மேற்பார்வை – சுப்ரமணி, தயாரிப்பு – சர்மிளா மாண்ரே, ஆர்.சர்வண், திரைக்கதை வசனம், இயக்கம் – A.R.முகேஷ்.

படம் பற்றி இயக்குநர் முகேஷ் பேசும்போது, “வெற்றிவேல் ராஜாவின்  மருந்துக் கடையில் வேலை பார்க்கும் விமல், சிங்கம் புலி இருவரும் அதிகப்படியான வருமானத்திற்காக சின்ன, சின்ன திருட்டுக்களை செய்பவர்கள்.

ஆனந்தராஜுக்கு சொந்தமான விலை மதிப்பில்லாத ஒரு கடத்தல் பொருள் ஒன்று  விமல்-சிங்கம்புலி கோஷ்டியிடம் மாட்டிக் கொள்ள அவர்களை ஆனந்தராஜ் குரூப் துரத்துகிறது.

இதே வழக்கு விசாரணைக்காக போலீஸ் அதிகாரிகளான மன்சூரலிகான், பூர்ணா கோஷ்டியும் இவர்களைத் துரத்துகிறது.

தன் கடையில் கை வைத்து விட்டார்கள் என்று அவர்களை பிடித்தே தீருவது என்று வெற்றிவேல் ராஜா குரூப்பும் துரத்துகிறது.

இப்படி படம் முழுவதும் ஒரே துரத்தல் மயம்தான். இதில் கிளாமர், ஹூயூமர் இரண்டையும் சரி பாதியாக கலந்து கட்டி படத்தை உருவாக்கியிருக்கிறோம்..” என்றார்.

 

Our Score