வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன் கே.எஸ்.சிவராமன் அதிக பொருட்செலவில் தயாரித்து வரும் படம் ‘எங் மங் சங்.’
இந்த படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். மற்றும் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்ரா லட்சுமணன், ‘கும்கி’ அஸ்வின், ‘காளி’ வெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா இவர்களுடன் ‘பாகுபலி’ படத்தில் வில்லனாக நடித்திருந்த பிரபாகர் இந்தப் படத்திலும் வில்லன் வேடம் ஏற்றுள்ளார்.
ஒளிப்பதிவு – R.P.குருதேவ், படத் தொகுப்பு – பாசில், நிரஞ்சன், பாடல்கள் -பிரபுதேவா மு.ரவிக்குமார், இசை – அம்ரீஷ், நடனம் – ஸ்ரீதர், நோபல், சண்டை பயிற்சி – சில்வா, தயாரிப்பு – கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – அர்ஜுன்.M.S.
பிரபுதேவா இந்த படத்தில் குங்பூ மாஸ்டராக நடிக்கிறார். சண்டைகளை கற்று கொடுக்கும் தொழிலை செய்யும் கூட்டத்தின் தலைவனாக ‘பாகுபலி’ வில்லன் பிரபாகர் நடிக்கிறார்.
நாயகன் பிரபுதேவா, பாகுபலி வில்லன் பிரபாகருடன் மோதும் சண்டை காட்சிகள் சென்னை அருகே பொழிச்சலூர் காட்டு பகுதியில் ஏழு நாட்கள் படமாக்கப்பட்டது. இந்தப் படப்பிடிப்பில் ஆயிரக்கணக்கான நடிகர், நடிகைகள் பங்கெடுக்க மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டது.
“குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைத்து ரசிகர்களின் கொண்டாட்டமான படமாக இந்த ‘எங் மங் சங்’ இருக்கும்…” என்றார் இயக்குநர் அர்ஜூன்.
தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெருமளவு முடிவடைந்துள்ளது.