சமீப காலமாக தமிழ் சினிமாவில் வித்தியாசமான பட தலைப்புகள் வந்தவண்ணம் உள்ளது. அந்த வரிசையில் முற்றிலும் மாறுபட்ட தலைப்புடன் ஒரு திரில்லர் படம் உருவாகி வருகிறது. அது எஸ்.எஸ்.வி. எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆறுமுகம் தயாரிக்கும் ‘ரெடி டூ சூட்’ திரைப்படமாகும்.
இந்தப் படத்தில் ‘நேரம்’, ‘பிரேமம்’, ‘வெற்றிவேல்’ போன்ற படங்களில் நடித்த ஆனந்த் நாக் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஜீவிதா நடிக்கிறார். வில்லனாக பாரதிராஜாவின் மகன் மனோஜ் கே.பாரதிராஜா நடிக்கிறார். மற்றும் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர்.
ஒளிப்பதிவு – சதீஷ் கதிர்வேல், இசை – அச்சு, மக்கள் தொடர்பு – மணவை புவன், தயாரிப்பு – எஸ்.ஆறுமுகம். எழுத்து, இயக்கம் – மனோஜ் குமார் இதயராஜ்.
முழுக்க, முழுக்க திரில்லராக உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.
இந்த படத்தின் பூஜை ஏவி.எம் ஸ்டூடியோவில் நேற்று காலை நடைபெற்றது. இந்த பூஜை நிகழ்ச்சியில் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர், தொழி்ல் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

























