full screen background image

‘திருவாளர் பஞ்சாங்கம்’ நவம்பர் 27-ம் தேதி வெளியாகிறது..!

‘திருவாளர் பஞ்சாங்கம்’ நவம்பர் 27-ம் தேதி வெளியாகிறது..!

அலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மலர்விழி நடேசன் இந்தப் படத்தைத் தயாரித்து, இயக்கியிருக்கிறார்.

இப்படத்தில் நாயகனாக ஆனந்த் நாக் நடித்துள்ளார். காமெடி கதாபாத்திரங்களில் காதல்’ சுகுமார் மற்றும் ஊர்வசி நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் ‘ஆடுகளம்’ நரேன், சுதா, கௌதம் மற்றும் சி.எம்.பாலா ஆகியோரும் நடித்துள்ளனர்.

கதை – திரைக்கதை -இயக்கம் – மலர்விழி நடேசன், தயாரிப்பு – மலர்விழி நடேசன், ஒளிப்பதிவு காசி விஷ்வா, இசை – ஜேவி, படத் தொகுப்பு – நாகராஜ் A.K.. கலை இயக்குநர் – சோலை அன்பு, நடன இயக்கம் – Cool ஜெயந்த் & ராதிகா, பாடல்கள் – சினேகன், செல்லமுத்து, ஜெயா(USA ), சண்டை இயக்கம் – ஸ்பீட் மோகன், டிசைன் – சசி & சசி, மக்கள் தொடர்பு – ஆனந்த் & ரியாஸ் கே அஹ்மத்.

திருவாளர் பஞ்சாங்கம்’ படம் பற்றி இயக்குர் மலர்விழி நடேசன் கூறுகையில், “இந்த திருவாளர் பஞ்சாங்கம்’ திரைப்படம் முழு நீள நகைச்சுவை படமாக உருவாகியுள்ளது. ஜாதகத்தை நம்பியே வாழும் நாயகனின் கதைதான் இந்த ‘திருவாளர் பஞ்சாங்கம்’ திரைப்படம்..!

ஒரு படித்து பட்டம் பெற்ற அப்பர் மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழும் ஒரு சராசரி வாலிபன் ஜோசியம், ஜாதகம், நல்ல நேரம் இவைகளின் மீது அதிகப்படியான நம்பிக்கை வைத்திருக்கிறான்.

தனக்கோ அல்லது தன் நண்பர்களுக்குக்கோ எதாவது பிரச்சினை என்றால் அதனை ஜோதிடம்  மற்றும் நல்ல நேரம் போன்றவற்றை பார்த்துப் பயன்படுத்தித்  தீர்த்துக் கொள்கிறான்.

அந்த நேரத்தில் கார்த்திக்கின் நண்பனான சீனு ஒரு கொலை பிரச்சனையில் மாட்டிக் கொள்ள

இந்தப் பிரச்சினையிலும் ஜாதகத்தை பின்பற்ற நினைக்கிறான். இதன் உதவியால் அந்த பிரச்சனையில் இருந்து அவன் வெளியே வந்தானா.. அல்லது ஜாதகம் அவனை கை விட்டதா.. என்பதை மிக சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்கள்.

நண்பன் சீனுவைக் காப்பாற்ற கார்த்திக் செய்யும் ஜோதிட சேட்டைகள் நம்மை நிச்சயமாக சிரிக்க வைக்கும். அனந்தநாக் மற்றும் ஊர்வசி இணைந்து நடித்திருக்கும் காட்சிகள் பார்ப்பவர்களை மேலும் சிரிக்க வைக்கும்.

இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொருவரும் தங்களது பங்கினை சிரிக்கும் வண்ணமாகவே சிறப்பாக வழங்கியுள்ளார்கள்.

ஜோசியம் மற்றும் ஜாதகம் இப்படத்தில் மேலும் வலிமை பெற்று உள்ளது. குருவின் பார்வை திருவாளர் பஞ்சாங்க’த்தின் மேல் விழும் வண்ணமாக படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது.

பல மாதங்களுக்குப் பிறகு தற்போதுதான் திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிடல் துவங்கியுள்ளது. இந்தச் சூழலில் அலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது பெருமைமிக்க தயாரிப்பான திருவாளர் பஞ்சாங்கம்’ படத்தை வரும் நவம்பர் 27-ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்கள்.

Our Score