‘ஈரம்’ அறிவழகன் இயக்கத்தில், அருண் விஜய் – மகிமா நம்பியார் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘குற்றம் 23’.
மெடிக்கல் – கிரைம் – திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த ‘குற்றம் 23’ திரைப்படம் வரும் மார்ச் 2-ம் தேதி வெளியாகவுள்ளது. ‘ரெதான் – தி சினிமா பீப்பல்’ நிறுவனத்தின் சார்பில் இந்தெர் குமார் தயாரித்து இருக்கும் இந்த ‘குற்றம் 23’ படத்தில் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் கே.எம்.பாஸ்கரன், படத் தொகுப்பாளர் புவன் ஸ்ரீனிவாசன், பாடலாசிரியர் விவேகா மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஹீரா அறிவழகன் என பல முன்னணி தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர்.
“என்னை நானே ஒரு தயாரிப்பாளராக முதல் முதலில் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்துக் கொள்ளும் ‘குற்றம் 23’ திரைப்படம், வரும் மார்ச் 2-ம் தேதியன்று வெளியாகிறது.
சிறந்த கதையம்சத்தோடு, வெற்றிக்கு தேவையான சிறப்பம்சங்களையும் உள்ளடக்கி ஒரு திரைப்படத்தை உருவாக்குவதுதான் பெரும்பாலான தயாரிப்பாளர்களின் முக்கிய குறிக்கோளாக இருக்கும்.
அந்த வகையில் என்னுடைய முதல் படத்திலேயே இத்தகைய சிறப்பம்சங்களை பெற்றிருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். இதற்கு உறுதுணையாய் இருந்து வரும் என்னுடைய நண்பர் அருண் விஜய்க்கு என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
தயாரிப்பு துறையில் கால் பதிக்கும் எங்களின் ‘ரெதான் – தி சினிமா பீப்பல்’ நிறுவனத்திற்கு சிறந்த ஒரு அடித்தளமாக இந்த ‘குற்றம் 23’ திரைப்படம் இருக்கும்..” என்று நம்பிக்கையோடு கூறுகிறார் ‘குற்றம் 23’ படத்தின் தயாரிப்பாளரான இந்தெர் குமார்.









