அரவிந்த்சாமியின் ‘போக’ ஆவர்த்தனம்

அரவிந்த்சாமியின் ‘போக’ ஆவர்த்தனம்

போகன் கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதியை மனதில் வைத்து உருவாக்கி இருந்திருக்கிறார் இயக்குநர் லக்ஷ்மன்.

ஆனால், அரவிந்த் சாமி தான் இந்தப் பாத்திரத்திற்கு சரியாக வருவாரென உறுதியாக நம்பியுள்ளார் ஜெயம் ரவி. ‘தனி ஒருவன்’ படத்தினைத் தொடர்ந்து மீண்டும் இருவரும் இணைந்து நடிக்க வைக்க வேண்டுமா என்று எழுந்த தயக்கத்தையும் மீறி, ஜெயம் ரவியின் வலியுறுத்தலின் பெயரில் அரவிந்த் சாமியிடம் கதையைச் சொல்லியுள்ளார் இயக்குநர் லக்ஷ்மன். ஜெயம் ரவி யூகித்த அந்த ‘அரவிந்த் சாமி’ மேஜிக் திரையில் அப்படியே பிரதிபலித்துள்ளது என்றே சொல்லவேண்டும். பத்திரிகையாளர்களுக்காகப் பிரத்தியேகமாகத் திரையிடப்பட்ட அந்த க்ளைமேக்ஸ் ‘வாவ்’ ரகம்.

பிரபுதேவா ஸ்டுடியோஸ் சார்பாகப் படத்தைத் தயாரித்துள்ள பிரபுதேவாவும், ஐசரி கணேஷும் மிகுந்த திருப்தியில் உள்ளனர். தங்களது முதல் படமான ‘தேவி’ போல், இப்படமும் ஹிட்டாகும் என்று தொடக்கம் முதலே மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்து வருகின்றனர்.

ரோமியோ ஜூலியட் படம் பார்த்துவிட்டு, பிரபுதேவா தங்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கும் ஒரு படம் செய்யுமாறு கேட்டுள்ளார். லக்ஷ்மன் சொன்ன மூன்று கதைகளில் கவரப்படாத, லக்ஷ்மன் தயக்கத்துடன் சொன்ன நான்காவது கதையான போகன் பண்ணலாமெனச் சொல்லியுள்ளார். “இது 5வது படமாகப் பண்ண வைத்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார் லக்ஷ்மன். அவரை, ‘பண்ணலாம் பண்ணுங்க’ என ஊக்குவித்து படத்தைத் தொடங்க வைத்துள்ளனர். அப்படியென்றால் தனக்கு ஆறு மாதம் டைம் வேண்டும் எனக் கேட்டுள்ளார் இயக்குநர் லக்ஷ்மன். ‘ஆறு மாசமா?’ எனப் பொறுமையில்லாத ஜெயம் ரவி, வேறு வழியில்லாமல், லக்ஷ்மன் ஒத்துக் கொண்டதே பெரிய விஷயமெனக் காத்திருந்துள்ளார்.

ஜெயம் ரவியின் காத்திருப்புக்கும் உழைப்புக்கும், ‘தனி ஒருவன்’ போல் இப்படமும் நல்ல பெயரை வாங்கித் தரும் என்பது மட்டும் உறுதி. 120 ரூபாய் கொடுத்து வரும் ரசிகன் நிச்சயம் ஏமாற மாட்டான் என நம்பிக்கையுடன் உறுதியளிக்கிறார் லக்ஷ்மன்.

Our Score