full screen background image

9 தமிழ்த் திரை பிரபலங்கள் வெளியிட்ட ‘ரங்கோலி’ படத்தின் போஸ்டர்!

9 தமிழ்த் திரை பிரபலங்கள் வெளியிட்ட ‘ரங்கோலி’ படத்தின் போஸ்டர்!

Gopuram Studios சார்பில் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிப்பில், இயக்குநர் வாலி மோகன்தாஸ் இயக்கத்தில், தற்போதைய காலக்கட்டத்திய பள்ளி வாழ்க்கையை சொல்லும் படமாக உருவாகியுள்ளது ‘ரங்கோலி’ திரைப்படம்.

‘மாநகரம்’, ‘தெய்வத் திருமகள்’ படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹமரேஷ், இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். பிரார்த்தனா, சாய்ஶ்ரீ, அக்‌ஷயா ஆகியோர் இப்படத்தில் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘ஆடுகளம்’ முருகதாஸ்  முக்கிய பாத்திரமொன்றில் நடித்துள்ளார்.

சுந்தரமூர்த்தி K.S. இசையமைத்துள்ளார். I.மருதநாயகம் ஒளிப்பதிவு செய்துள்ளார். G.சத்யநாராயணன் படத் தொகுப்பு செய்துள்ளார்.

ஸ்கூல் படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையை,  அவர்களது குடும்பங்களை சுற்றிய கதைகளை நம் தமிழ் சினிமா சொல்வதே இல்லை. இப்படம் அந்த ஏக்கத்தை போக்கும்வகையில் ஒரு அருமையான குடும்பப் படமாக இப்போதைய பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை சொல்லும் படமாக உருவாகியுள்ளது.

குடும்பத்தினரின் வற்புறுத்தலால் ஒரு பள்ளியில் இருந்து வேறொரு உயர்தர பள்ளிக்கு மாற்றலாகும் மாணவனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களே இப்படம்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் அருண் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் அதர்வா, இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், நடிகர் சதீஷ், நடிகை வாணி போஜன், நவீன் சந்திரா, கார்த்திக் ரத்னம் ஆகியோர்  இணைந்து வெளியிட்டனர்.

பள்ளி மாணவர்கள் ஒன்றாக கூடி நிற்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பலரது பள்ளி ஞாபகங்களை கிளறுவதோடு, அனைவரிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கடப்பா ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Our Score