full screen background image

கால் டாக்ஸி டிரைவரின் ஒரு நாள் வாழ்க்கைக் கதை ‘4554’ படம்

கால் டாக்ஸி டிரைவரின் ஒரு நாள் வாழ்க்கைக் கதை ‘4554’ படம்

மன்னன் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர்.பிரபா கர்ணன் தயாரிக்கும் புதிய படம் ‘4554.’

இந்தப் படத்தில் அஷோக் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக ஷீலா நாயர் நடிக்கின்றனர். இவர்களுடன் கோதண்டன், பெஞ்சமின், குட்டிப்புலி சரவண சக்தி, ஜாகுவார் தங்கம், கிரேன் மனோகர், மகேஷ் சேதுபதி, கம்பம் மீனா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதோடு படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார் டாக்டர். கர்ணன் மாரியப்பன். ஒளிப்பதிவை வினோத் காந்தியும், படத் தொகுப்பை விஷாலும், இசையை ரஷாந்த் அர்வினும் மேற்கொள்கிறார்கள். பத்திரிகை தொடர்பு – கோவிந்தராஜ்.

அக்டோபர் வெளியீடாக வரும் இத்திரைப்படம் ஒரு கால் டாக்ஸி டிரைவரின் வாழ்வில் ஒரு நாள் நடக்கும் நிகழ்வைக் கருவாகக் கொண்டதாகும்.

“முழுக்க முழுக்க ஒரு கால் டாக்ஸி டிரைவரைப் பற்றிப் பேசப் போகும்  முதல் திரைப்படமும் இதுவாகத்தான் இருக்கும்” என்கிறார் இயக்குநர் கர்ணன் மாரியப்பன்.

Our Score