சேஃப்டி ட்ரீம் ப்ரொடக்ஷன் ரூல் பிரேக்கர்ஸ் புரோடக்சன் மேஜிக் லேன்டர்ன் புரோடக்சன் தியா சினி கிரியேஷன்ஸ் ஆகிய நான்கு தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டணியில், தயாரிப்பாளர்கள் என்.செந்தில் பிரபு, சக்திவேல், ஜெகன் நாராயணன், கார்த்திக் அசோக் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘4 sorry’.
இப்படத்தில் காளி வெங்கட் மற்றும், பிக் பாஸ் டேனியல், கார்த்திக் அசோகன், ரித்விகா, சாக்ஷி அகர்வால் மற்றும் சஹானா செட்டி, ஜான் விஜய் மற்றும் முத்துக்குமார், ஆர்.என்.ஆர். மனோகர் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இயக்குநர் – சக்திவேல், ஒளிப்பதிவு – வெங்கடேஷ் பிரசாத், இசை – பிரசன்னா சிவராமன், படத் தொகுப்பு – பி.கே., கலை இயக்கம் – ஞானம், நேரடி தயாரிப்பாளர் – சிவக்குமார், மக்கள் தொடர்பு – பிரியா.
படம் பற்றி இயக்குநர் சக்திவேல் பேசும்போது, “இப்படம் சமுதாயத்தில் வாழும் சாதாரண மனிதர்கள் தங்களின் தவறை உணரும்போது கேட்கும் முதல் வார்த்தையான மன்னிப்பை சார்ந்து உருவாகியிருப்பதால் இப்படத்திற்கு ‘4 sorry’ என பெயரிடப்பட்டுள்ளது.
நான்கு சாதாரண மனிதர்களின் வாழ்க்கை இயல்புகளை இப்படம் பிரதிபலிக்க உள்ளது. இப்படம் ஆந்தாலஜி படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் அடுத்தடுத்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்…” என்றார்.
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு படம் வெற்றி பெற வாழ்த்தினார்.