full screen background image

நாயகிகளை முன்னிலைப்படுத்தும் ‘கருங்காப்பியம்’ திரைப்படம்

நாயகிகளை முன்னிலைப்படுத்தும் ‘கருங்காப்பியம்’ திரைப்படம்

இயக்குநர் டிகே இயக்கத்தில் வைபவ், வரலட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காட்டேரி’. இந்தப் படம் தியேட்டர்கள் மூடப்பட்டதால் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படமான கருங்காப்பியம்’ படப்பிடிப்பையும் முடித்துவிட்டார் டிகே.

இந்தக் ‘கருங்காப்பியம்’ படத்தை வெற்றிவேல் டாக்கீஸ், பேவ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் ஏ.பி. இண்டர்நேஷனல் ஆகிய நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.

இத்திரைப்படம் முழுக்க, முழுக்க நாயகிகளை மையப்படுத்திய ஹாரர் படமாக உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரெஜினா, ஜனனி, ரைசா, கலையரசன், யோகி பாபு, கருணாகரன், ஜான் விஜய், ஷா ரா, விஜே பார்வதி, விஜே ஆஷிக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஈரான் நடிகை நொய்ரிகா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவாளராக விக்கி, இசையமைப்பாளராக எஸ்.என்.பிரசாத், படத் தொகுப்பாளராக விஜய் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

‘கருங்காப்பியம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடையும் தறுவாயில் உள்ளன.

Our Score