‘3.33’ என்ற பெயரில் வரப் போகும் பேய்ப் படம்..!

‘3.33’ என்ற பெயரில் வரப் போகும் பேய்ப் படம்..!

நகைச்சுவை கதைகளும், பேய்க் கதைகளும் என்றென்றும் சினிமாக்களில் அசைக்க முடியாதவை. எந்த ஒரு வழியிலாவது தயாரிப்பாளரைக் காப்பாற்றிவிடுபவை இந்த மாதிரி படங்கள்தான். இதனால்தான் ஒரு வருடத்தில் அதிகமான கதைக் களனில் வெளி வருபவை இந்த மாதிரியான நகைச்சுவை திரைப்படங்களும், பேய்ப் படங்களும்தான்.

அந்த வரிசையில் இந்தாண்டில்  வெளிவரப் போகும் பேய்ப் படங்களில் ஒன்றுதான் ‘3.33’ என்ற திரைப்படம்.

இந்தப் படத்தை டி.ஜீவிதா கிஷோர் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் சாண்டி, சுருதி, ரமா, ரேஷ்மா, மைம் கோபி, சரவணன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தில் பாடல்களே இல்லை என்பது ஒரு சிறப்பம்சமாகும்.

இந்தப் படத்தை இயக்குநர் நம்பிக்கை சந்துரு இயக்குகிறார்.

படம் பற்றி இயக்குநர் சந்துரு பேசுகையில், “நகைச்சுவை கலந்த பேய்ப் படங்கள் நிறையவே வந்துவிட்டன. இதனால் தற்போதெல்லாம் பேய் மீதான பயம் போய், சிரிப்புதான் வருகிறது. இதில் இருந்து முற்றிலும் மாறுபட்டு திக்.. திக்.. என்ற திகிலில் கலந்த திரைக்கதையில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது.

இந்தப் படத்துக்காக மாங்காடு அருகே ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்து அதே பேய் பங்களாவாக மாற்றியிருக்கிறோம். படத்தின் பெரும்பாலானா காட்சிகளை அந்தப் பங்களாவில்தான் படமாக்கியுள்ளோம். இந்தப் படத்தில் நான் ஒரு மருத்துவர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளேன்..” என்றார் இயக்குநர் சந்துரு.

Our Score