புதுமுகங்கள் நடிக்கும் ‘அம்மா உணவகம்’ திரைப்படம்

புதுமுகங்கள் நடிக்கும் ‘அம்மா உணவகம்’ திரைப்படம்

இன்றைக்கு அகில இந்தியாவும் பின்பற்றும் ஒரு மக்கள் திட்டம் என்றால் அது ‘அம்மா உணவகம்’தான்.

இந்தியாவில் இருக்கும் பல்வேறு மாநிலங்களும் இந்தத் திட்டத்தைக் கையில் எடுத்து தத்தமது மாநிலங்களில் அறிமுகப்படுத்தி வருகின்றன.

மிகக் குறைந்த விலையில் ஏழை, எளிய மக்களுக்கு உணவளிக்கும் இந்தத் திட்டத்தை கொண்டு வந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதாவுக்கு இத்திட்டமே மிகப் பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது.

தற்போது இந்தப் பெயரை வைத்தே ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது.

தயாரிப்பாளர் எம்.பி.இப்ராஹிம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் அஸ்வின் கார்த்திக், சசிசரத் இருவரும் நாயகர்களாகவும் ஸ்ரீநிதி நாயகியாகவும் நடிக்கின்றனர்.

மேலும் இவர்களுடன் ஆர்.வி.உதயகுமார், சரவண சக்தி உட்பட பல முக்கிய நடிகர், நடிகைகளும் நடிக்கின்றனர்.

இயக்குநர் விவேகபாரதி இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ‘வசந்தம் வந்தாச்சு’ மற்றும் ‘பாசக்காரப் பய’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.

இந்த ‘அம்மா உணவகம்’ படம் பற்றி இயக்குநர் விவேக பாரதி பேசுகையில், “மனித நேயமும், சமூக அக்கறையும் கொண்ட ஒருவர் விளிம்பு நிலையில் உள்ள சில மனிதர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறார். அவர்களின் வாழ்வியல் பயணம் வெற்றி பெற்றதா.. இல்லையா.. என்பதுதான் இந்தப் படத்தின் கதை. படப்பிடிப்பு தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது..” என்றார்.

Our Score