மாராத்தி மொழி படத்தின் ரீமேக்கில் நடிக்கப் போகும் கமல்ஹாசன்..!

மாராத்தி மொழி படத்தின் ரீமேக்கில் நடிக்கப் போகும் கமல்ஹாசன்..!

நடிகர் கமல்ஹாசன் தற்போது மும்முரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பதால் அவர் நடிப்பதாக இருந்த ‘இந்தியன்-2’, மற்றும் ‘விக்ரம்-2’ ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் எப்போது துவங்கும் என்பதே தெரியவில்லை.

இந்த நிலையில் மராத்தி மொழியில் வெளியாகி பெரும் பாராட்டைப் பெற்றுள்ள ஒரு திரைப்படத்தின், தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசன் நடிக்க வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த மராத்தி படத்தின் வெற்றியையும், புகழையும் கேள்விப்பட்ட தமிழ்ச் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான ‘டிரைடண்ட் ஆர்ட்ஸ்’ ரவீந்திரன் அந்தப் படத்திற்கான தமிழ் ரீமேக்கிற்கான உரிமத்தை அந்தப் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளரிடத்தில் கேட்டிருக்கிறார்.

அவர்களோ “எவ்வளவு பணம் தருவீர்கள்…?” என்று கேட்காமல், ‘டிரைடண்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனத்தைப் பற்றியும் தயாரிப்பாளர் ரவீந்திரனைப் பற்றியும் கேட்டுள்ளார்கள். தயாரிப்பாளர் ரவீந்திரன் இதுவரையிலும் தயாரித்த.. வாங்கி வெளியிட்ட பல திரைப்படங்களின் வரலாற்றைத் தெரிந்து கொண்ட பின்புதான் அந்த மராத்தி படத்தின் மொழி மாற்ற உரிமையை ரவீந்திரனுக்கு வழங்கினார்களாம்.

இந்தப் படத்தில் கமல்ஹாசன் நடிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்றெண்ணிய தயாரிப்பாளர்  ரவீந்திரன் இது பற்றி கமல்ஹாசனிடம் பேசியிருக்கிறார். “பிக் பாஸ் முடிந்த பின்பு, தேர்தல் சுற்றுப் பயணமும் முடிந்த பின்பு அது பற்றிப் பேசுவோம்…” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளாராம்.

ஆக, கமலின் எதிர்காலத் திரைப்படங்களின் பட்டியலில் கூடுதலாக ஒரு படமும் சேர்கிறது..!

அந்த மராத்தி படத்தின் பெயர்..?

“அது இப்போதுவரைக்கும் சஸ்பென்ஸாகவே இருக்கட்டும்…” என்கிறார் தயாரிப்பாளர் ரவீந்திரன்.

Our Score