full screen background image

2022-ம் ஆண்டின் உண்மைத் தமிழன் திரைப்பட விருதுகள்…! 

2022-ம் ஆண்டின் உண்மைத் தமிழன் திரைப்பட விருதுகள்…! 

கடந்த 2 வருடங்களாக கொரோனா என்னும் அரக்கனிடம் சிக்கி உலகமே தவித்த நிலையில் நமது கோடம்பாக்கமும் மாட்டிக் கொண்டது. பாதிக்குப் பாதி படங்களே சென்ற 2 ஆண்டுகளாக வெளியாகின.

ஆனால் இந்த வருடம் மீண்டும் பழைய நிலைமைக்கு மீண்டு வந்துள்ளது தமிழ்ச் சினிமா. இந்தாண்டு தியேட்டர்களில் மட்டும் 193 படங்களும், ஓடிடி மற்றும் தொலைக்காட்சிகளில் நேரடியாக 29 படங்களும் வெளியாகியுள்ளன.

நாம் இதுவரையிலும் கடந்த 6 வருடங்களாக வெளியிட்டிருக்கும் ‘உண்மைத்தமிழன் விருது’களில் தியேட்டர்களில் வெளியான படங்களை மட்டுமே கணக்கில் கொண்டுள்ளோம். இந்த வருடமும் அதேபோல் ஓடிடி, மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியான படங்களைக் கணக்கில் எடுக்காமல் தியேட்டர்களில் வெளியான 193 படங்களில் நாம் பார்த்தவரையிலும் சிறந்த படைப்பாளிகளை, நடிகர், நடிகைகளை. தொழில் நுட்பக் கலைஞர்களைத் தேர்வு செய்துள்ளோம்.

எப்போதும்போல இந்தாண்டும் சிறந்த கலைஞர்களையும், திரைப்படங்களையும் தேர்வு செய்வது மிகக் கடினமாக இருந்தது. பல்வேறு விஷயங்களையும் சீர்தூக்கிப் பார்த்து, நடுநிலைமை தவறாமல், யார், எவர் என்றெல்லாம் யோசிக்காமல்தான் 2022-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படங்களையும், கலைஞர்களும் தேர்வு செய்திருக்கிறோம்..!

இதில் விடுபட்டுப் போன நல்ல, திறமையான கலைஞர்களும், படங்களும் இருக்கத்தான் செய்கின்றன. மயிரிழையில் மில்லி செகண்ட் இடைவெளியில் அவைகள் விடுபட்டிருக்கின்றன. அந்தப் படைப்பாளிகளும், கலைஞர்களும் அடுத்தடுத்து இதைவிடவும் மிகச் சிறந்த படைப்புகளை படைத்து தங்களை நிரூபிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்..!

வெற்றி பெற்ற அனைத்துக் கலைஞர்களுக்கும் நமது இணையத்தளத்தின் வாசகர்கள் சார்பாகவும், தமிழ்ச் சினிமாவின் தீவிர ரசிகர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்..! 

2022-ம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களுக்கான உண்மைத்தமிழன் விருதுகள்..!

1. சிறந்த திரைப்படம் – முதல் பரிசு – கடைசி விவசாயி

2. சிறந்த திரைப்படம் – இரண்டாம் பரிசு – செம்பி

3. சிறந்த திரைப்படம் – மூன்றாம் பரிசு – கார்கி

4. சிறந்த நகைச்சுவை திரைப்படம் – கட்டா குஸ்தி

5. சிறந்த பேய் படம் – கனெக்ட்

6. சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – பொன்னியின் செல்வன்

7. சிறந்த இயக்குநர் – மணிகண்டன் (கடைசி விவசாயி)

8. சிறந்த இயக்குநர் – சிறப்பு விருது – மணிரத்னம் (பொன்னியின் செல்வன்)

9. சிறந்த புதுமுக இயக்குநர் – விஷால் வெங்கட் (சில நேரங்களில் சில மனிதர்கள்)

10. சிறந்த புதுமுக இயக்குநர் – சிறப்பு விருது – அரவிந்த் சீனிவாசன் (தேஜாவு)

11. சிறந்த கதை – மணிகண்டன் (கடைசி விவசாயி)

12. சிறந்த கதை – சிறப்பு விருது – கெளதம் ராமச்சந்திரன் (கார்கி)

13. சிறந்த திரைக்கதை – கெளதம் ராமச்சந்திரன் (கார்கி)

14. சிறந்த திரைக்கதை – சிறப்பு விருது – அரவிந்த் சீனிவாசன் (தேஜாவு)

15. சிறந்த வசனம் – ப.ஐயப்பன் (கட்சிக்காரன்)

16. சிறந்த வசனம் – சிறப்பு விருது – சி.எஸ்.மகிவர்மன் (வாய்தா)

17. சிறந்த நடிகர் – நல்லாண்டி (கடைசி விவசாயி) 

18. சிறந்த நடிகர் – சிறப்பு விருது – விஜய் சேதுபதி (விக்ரம்)  

19. சிறந்த புதுமுக நடிகர் – கெளஷிக் ராம் (காலங்களில் அவள் வசந்தம்)

20. சிறந்த புதுமுக நடிகர் – சிறப்பு விருது – ராஜ் கிருஷ் (நெடுநீர்)

21. சிறந்த புதுமுக நடிகை – சித்தி இத்னானி (வெந்து தணிந்தது காடு)

22. சிறந்த புதுமுக நடிகை – சிறப்பு விருது – எல்லி அவுரம் (நானே வருவேன்)

23. சிறந்த நடிகை – கோவை சரளா (செம்பி)

24. சிறந்த நடிகை – சிறப்பு விருது – காயத்ரி (மாமனிதன்)

25. சிறந்த துணை நடிகர் – கருணாஸ் (ஆதார்)

26. சிறந்த துணை நடிகர் – சிறப்பு விருது – மு.ராமசாமி (வாய்தா)

27. சிறந்த துணை நடிகை – நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்)

28. சிறந்த துணை நடிகை – சிறப்பு விருது – அபர்ணா பாலமுரளி (நித்தம் ஒரு வானம்)

29. சிறந்த குணச்சித்திர‌ நடிகர் – எஸ்.ஜே.சூர்யா (டான்)

30. சிறந்த குணச்சித்திர நடிகர் சிறப்பு விருது – பிரகாஷ்ராஜ் (திருச்சிற்றம்பலம்)

31. சிறந்த குணச்சித்திர‌ நடிகை – கீதா கைலாசம் (நட்சத்திரம் நகர்கிறது)

32. சிறந்த குணச்சித்திர நடிகை சிறப்பு விருது – ஜூவல் மேரி (மாமனிதன்)

33. சிறந்த வில்லன் நடிகர் – ஆரவ் (கலகத் தலைவன்)

34. சிறந்த வில்லன் நடிகர் சிறப்பு விருது – சுனில் ரெட்டி (எண்ணித் துணிக)

35. சிறந்த வில்லி – விஜி சந்திரசேகர் (மருத)

36. சிறந்த வில்லி – சிறப்பு விருது – வசுதா கிருஷ்ணமூர்த்தி (பிராஜெக்ட் சி)

37. சிறந்த நகைச்சுவை நடிகர் – சதீஷ் (நாய் சேகர்)

38. சிறந்த நகைச்சுவை நடிகர் சிறப்பு விருது – யோகிபாபு (பல படங்கள்)

39. சிறந்த நகைச்சுவை நடிகை – ஊர்வசி (வீட்ல விசேஷங்க)

40. சிறந்த நகைச்சுவை நடிகை சிறப்பு விருது – ஷிவாங்கி (டான்)

41. சிறந்த குழந்தை நட்சத்திரம் – மாஹின்-டாவியா (அக்கா குருவி)

42. சிறந்த குழந்தை நட்சத்திரம் – சிறப்பு விருது – லிரிஷ் ராகவ் (லத்தி)

43. சிறந்த ஒளிப்பதிவு – கெளதம் ஷங்கர் (ரெண்டகம்)

44. சிறந்த படத் தொகுப்பு – பிலோமின் ராஜ் (விக்ரம்)

45. சிறந்த ஒலிப்பதிவு – சச்சின் சுதாகரன், ஹரிஹரன்.M (கனெக்ட்)

46. சிறந்த ஒலிக் கலவை – கண்ணன் கண்பத் (விக்ரம்)

47. சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் – NY VFX WALLAH (பொன்னியின் செல்வன்)

48. சிறந்த நடன இயக்கம் – பிருந்தா மாஸ்டர் (பொன்னியின் செல்வன்)

49. சிறந்த சண்டை இயக்கம் – பீட்டர் ஹெயின் (லத்தி)

50. சிறந்த கலை இயக்கம் – தோட்டா தரணி (பொன்னியின் செல்வன்)

51. சிறந்த ஆடை வடிவமைப்பு – ஏகோ லகானி (பொன்னியின் செல்வன்)

52. சிறந்த ஒப்பனையாளர் – விக்ரம் கெய்க்வாட் (பொன்னியின் செல்வன்)

53. சிறந்த பின்னணி இசை – ஸ்ரீகாந்த் தேவா(கலகத் தலைவன்)

54. சிறந்த பாடல் இசையமைப்பாளர் – ஹிதேஷ் முருகவேல் (நெடுநீர்)

55. சிறந்த பாடலாசிரியர் – கானா மெய்யழகன் (லைஃபே ஒரு லெஸனு, நெடுநீர்)

56. சிறந்த டூயட் பாடல் – செங்குறிச்சி சின்னப் பொண்ணு (கட்சிக்காரன்)

57. சிறந்த ஜனரஞ்சகப் பாடல் – பத்தல பத்தல (விக்ரம்)

58. சிறந்த சோகப் பாடல் – காதலியே காதலியே (நெடுநீர்)

59. சிறந்த பின்னணி பாடகர் – ஹரிச்சரண் (செங்குறிச்சி சின்னப் பொண்ணு – கட்சிக்காரன்)

60. சிறந்த பின்னணி பாடகி – மாலதி லஷ்மண் (ஏராளம் தாராளம் – நெடுநீர்)

61. சிறந்த டிரெய்லர் – விக்ரம்

தேர்வுகள் பற்றிய கருத்துகள், விமர்சனங்கள், அர்ச்சனைகள், பொங்கல்கள் அனைத்தும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன..!

 

Our Score