full screen background image

2019-2020-ம் ஆண்டுகளுக்கான ‘கலைமாமணி’ விருது பெறும் திரைத்துறையினரின் பட்டியல்..!

2019-2020-ம் ஆண்டுகளுக்கான ‘கலைமாமணி’ விருது பெறும் திரைத்துறையினரின் பட்டியல்..!

தமிழக அரசு சார்பில் திரைத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ‘கலைமாமணி’ விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது 2019 மற்றும் 2020-ம் ஆண்டுக்கான கலைமாமணி’ விருது பெறுபவர்கள் பட்டியலை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன்படி 2019-ம் ஆண்டுக்கான ‘கலைமாமணி’ விருது பெறும் திரைத் துறையினரின் பட்டியல் இது :

நடிகர் ராமராஜன், நடிகர் யோகிபாபு, இயக்குநர் லியாகத் அலிகான், நடிகை தேவர்தஷிணி, இசையமைப்பாளர் தினா, பாடலாசிரியர் காமகோடியன், ஒளிப்பதிவாளர் ரகுநாத ரெட்டி, பின்னணிப் பாடகர் அனந்து, பின்ணிப் பாடகி சுஜாதா, மெல்லிசை கலைஞர் – கோமகன், தயாரிப்பாளர் – கலைப்புலி எஸ்.தாணு, படத் தொகுப்பாளர் ஆண்டனி, உடையலங்கார கலைஞர் எஸ்.ராஜேந்திரன், சண்டை இயக்குநர் தளபதி தினேஷ், நடன இயக்குநர் சிவசங்கர், மக்கள் தொடர்பாளர் சிங்காரவேலு, இயக்குநர் மனோஜ் குமார், ஒப்பனை கலைஞர் சண்முகம், சின்னத்திரை நடிகை சாந்தி வில்லியம்ஸ்.

2020-ம் ஆண்டுக்கான ‘கலைமாமணி’ விருது பெறுபவர்களின் பட்டியல் :

நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை மதுமிதா, இசையமைப்பாளர் டி.இமான், பாடலாசிரியர் காதல்மதி, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், வசனகர்த்தா வி.பிரபாகர், சண்டை இயக்குநர் – ஜாக்குவார் தங்கம், நடன இயக்குநர் – ஸ்ரீதர், நடிகை சங்கீதா, சினிமா பத்திரிகையாளர் சபீதா ஜோஸப், சின்னத்திரை நடிகை நித்யா, புகைப்பட கலைஞர் சிற்றரசு, ஒப்பனைக் கலைஞர் ஏ.சபரி கிரீசன், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், இயக்குநர் ரவி மரியா.

2019-ம் ஆண்டுக்கான புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா ‘சிறப்பு கலைமாமணி’ விருது பழம் பெரும் நடிகைகளான சரோஜாதேவி, சவுகார் ஜானகி, பாடகி ஜமுனா ராணி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

2019-ம் ஆண்டுக்கான அகில இந்திய விருதான இசைத் தமிழ் ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது’ பழம் பெரும் பாடகியான எஸ்.ராஜேஸ்வரிக்கு வழங்கப்படுகிறது.

2020-ம் ஆண்டுக்கான அகில இந்திய விருதான ‘இசைத் தமிழ் எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது’ பிரபல பாடகி வாணி ஜெயராமுக்கு வழங்கப்படுகிறது.

Our Score