full screen background image

2016-ல் வெற்றிக் கொடி கட்டிய அறிமுக இயக்குநர்கள்..!

2016-ல் வெற்றிக் கொடி கட்டிய அறிமுக இயக்குநர்கள்..!

2016-ம் ஆண்டில் வெளியான 208 படங்களில் 129 புதுமுக இயக்குநர்கள் அறிமுகமாகி உள்ளனர்.

‘கிடாரி’ பிரசாந்த் முருகேசன், ‘நாளை முதல் குடிக்க மாட்டேன்’ கோ.செந்தில்ராஜா, ‘ஒரு நாள் கூத்து’ நெல்சன் வெங்கடேசன், ‘வெற்றிவேல்’ வசந்தமணி, ‘மெட்ரோ’ ஜான், ‘கிடா பூசாரி மகுடி’ ஜெயக்குமார், ‘உறியடி’ விஜயகுமார், ‘கணிதன்’ சந்தோஷ், ‘பட்டதாரி’ சங்கர பாண்டியன், ‘இளமி’ ஜூலியன் பிரகாஷ், ‘ரெமோ’ பாக்யராஜ் கண்ணன், ‘பலே வெள்ளையத்தேவா’ சோலை பி.பிரகாஷ், ‘துருவங்கள்-16’ கார்த்திக் நரேன் ஆகியோர் கவனிக்க வைத்திருக்கிறார்கள்.

23 வயதே நிரம்பிய சென்ற ஆண்டுதான் கல்லூரியில் இருந்து பட்டப் படிப்பை முடித்துவிட்டு வெளியேறியிருக்கும் அறிமுக இயக்குநரான கார்த்திக் நரேன் இயக்கியிருக்கும் ‘துருவங்கள்-16’ திரைப்படம் தமிழ்ச் சினிமாவின் உச்ச இயக்குநரான ஷங்கரையே கவர்ந்திழுத்திருக்கிறது. யாரிடமும் இயக்குதல் தொழிலைக் கற்றுக் கொள்ளாமலேயே கேள்வி ஞானத்தாலும், குறும்படங்கள் எடுத்த அனுபவத்தை வைத்தும் தனது முதல் படத்தை இயக்கி பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் கார்த்திக் நரேன்.

இந்த 2016-ம் ஆண்டில் மூன்று பெண் இயக்குநர்கள் தமிழ்த் திரையுலகத்தில் அறிமுகமாகியிருக்கிறார்கள். 

‘இறுதிச் சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கராவும், ‘ராஜா மந்திரி’ படத்தை இயக்கிய உஷா கிருஷ்ணனும், ‘மாலை நேரத்து மயக்கம்’ இயக்கிய கீதாஞ்சலி செல்வராகவனும் தமிழ்த் திரையுலகத்தில் புதிய இயக்குநர்களாக அறிமுகமாகியிருக்கிறார்கள். 

Our Score