இது தமிழ்த் திரையுலகத்தில் புதுமையான ஊழல்..!

இது தமிழ்த் திரையுலகத்தில் புதுமையான ஊழல்..!

தமிழ்த் திரையுலகத்தில் நன்கு அறிந்த பைனான்ஸியரான சுனில், தன்னுடைய பினாமி நபரான சுரபி மோகன் என்பவர் மூலம், பல தமிழ்த் திரைப்படங்களின் இந்தி டப்பிங் உரிமையை வலுக்கட்டாயமாக அபகரித்து, ஏமாற்றி வந்திருப்பதாக ‘1945’ படத்தின் தயாரிப்பாளரும், ‘கே புரொடெக்சன்ஸ்’ நிறுவனத்தின் அதிபருமான எஸ்.என்.ராஜராஜன் புகார் எழுப்பியிருக்கிறார்.

திரைப்பட தயாரிப்பாளர்களின் அப்பாவித்தனத்தை  தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தயாரிப்பாளர்களை ஏமாற்றி வரும் பைனான்ஸியர் சுனில் ஜெயின் மீதும், அவருடைய பினாமியான சுரபி மோகன் மீதும் நடவடிக்கை எடுக்கக்  கோரி ‘வா டீல்’, ‘காவியன்’, ‘ஐங்கரன்’,  ‘1945’ ஆகிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

rajarajan-sunil jain-complaint-1

rajarajan-sunil jain-complaint-2

rajarajan-sunil jain-complaint-3

Our Score