மைன்ட் டிராமா என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படம் ‘1818’.
இந்தப் படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் சுமன், ராஜேந்திர பிரசாத், பிரமானந்தம், ‘சூது கவ்வும்’ ரமேஷ் திலக், ‘ராஜா ராணி’ படத்தில் நடித்த மீரா கோஷல் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ஓம்பிரகாஷ், இசை – எஸ்.எஸ்.தமன், பாடல்கள் – மதன் கார்க்கி, எழுத்தும், தயாரிப்பு, இயக்கம் – ரிதுன் சாகர், தயாரிப்பு – மைன்ட் டிராமா.
“2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதியன்று மும்பை நகரம் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் முற்றுகையிடப்பட்டு பலர் கொல்லப்பட்ட சம்பவம்தான் இந்தப் படத்தின் கதைக் களம். இந்தச் சம்பவங்களைத் தொகுத்து ஒரு விறுவிறுப்பான படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளோம்…” என்றார் இயக்குநர் ரிதுன் சாகர்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் பிரம்மாண்டமான செலவில் தயாராகிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.