லைகா நிறுவனம் தயாரித்த படத்தை 11:11 தயாரிப்பு நிறுவனம் வெளியிடுகிறது..!

லைகா நிறுவனம் தயாரித்த படத்தை 11:11 தயாரிப்பு நிறுவனம் வெளியிடுகிறது..!

Lyca Productions தயாரிப்பில் யோகி பாபு நடித்திருக்கும் பன்னிக்குட்டி’ திரைப்படத்தை, 11:11 Productions நிறுவனம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வெளியிடுகிறது.  

இந்தப் படத்தில் யோகி பாபுவைத் தவிர்த்து, கருணாகரன், திண்டுக்கல் லியோனி, சிங்கம் புலி, விஜய் டிவி புகழ் ராமர், தங்கதுரை போன்ற முன்னணி நகைச்சுவை நடிகர்கள் மற்றும் இன்னும் பல முன்னணி பிரபலங்கள்  இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு கே இசையமைத்துள்ளார். சதீஷ் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரவி முருகையா கதை எழுதியுள்ளார். மேலும் இயக்குநர் அனுசரனுடன் இணைந்து திரைக்கதையும் எழுதியுள்ளார். சண்டை இயக்கத்தை ஃபயர் கார்த்திக் செய்ய, M.R.ராஜகிருஷ்ணன் (ஆடியோகிராஃபி), முருகன் (ஸ்டில்ஸ்), எம்.சிவகுமார் (தயாரிப்பு மேலாளர்), சமீர் பரத் ராம் (நிர்வாகத் தயாரிப்பாளர்) ஆகியோர் தொழில் நுட்பக் குழுவில் பணியாற்றியுள்ளனர். இந்தப் பன்னி குட்டி’ திரைப்படத்தை  அனு சரண் இயக்கியுள்ளார்.

11:11 Productions தயாரிப்பாளர்  Dr. பிரபு திலக், Lyca Productions தயாரிப்பாளர் சுபாஸ்கரனுடன் இணைந்து இந்தக் காமெடி படமான ‘பன்னிக்குட்டி’ படத்தினை தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வெளியிடுகின்றார்.

இது குறித்து 11:11 Productions நிறுவனத்தின் இயக்குநரும், இணை தயாரிப்பாளருமான ஷ்ருதி திலக் பேசும்போது, “எங்கள் தயாரிப்பு நிறுவனமான 11:11 Productions பன்னிக்குட்டி’ படத்தின் தமிழகம் கேரளா மற்றும் கர்நாடகா வெளியீட்டிற்கு, Lyca Productions உடன் இணைவதில் மிகுந்த பெருமை கொள்கிறோம்.

ஒரு நிறுவனமாக ரசிகர்களின் ஏக்கங்களை நிறைவு செய்யும் தரமான பொழுது போக்கு படைப்புகளை அளிக்கும் நோக்கில் முழுக்க முழுக்க காமெடி சரவெடியாக பன்னி குட்டி’ திரைப்படத்தை திரைப்பட ரசிகர்களுக்கு அளிப்பது மகிழ்ச்சி. குடும்ப பொழுது போக்கு திரைப்படமாக திரையரங்கு சிரிப்பு மழையில் நனையும் எனபதை உறுதியாக நம்புகிறோம்.

11:11 Productions எப்போதும் திரை ரசிகர்கள் இதயம் கனிந்து ரசித்து மகிழும் திரைப்படத்தை வழங்கி வருதில் மிகுந்த பெருமை கொள்கிறது. அந்த வரிசையில் இந்தப் பன்னி குட்டி’ திரைப்படமும் ரசிகர்களுக்கு  ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கும்…” என்றார்.

Our Score