இந்த வருடத்தின் 4-வது வாரமான இன்றைக்கு வெளியான திரைப்படங்களின் லிஸ்ட் இது :
இங்க என்ன சொல்லுது
இங்க என்ன சொல்லுது என்ற ஒரு வரி டயலாக் மூலமாகவே ரசிகர்களை பெரிதும் கவர்ந்த விடிவி கணேஷ் தயாரித்திருக்கும் படம் இங்க என்ன சொல்லுது.. இதில் மீரா ஜாஸ்மின் ஹீரோயினாக நடித்திருக்கிறார். சிம்புவும், ஆண்ட்ரியாவும் கெஸ்ட் ரோலில் வர.. சந்தானம் ஒன் மேன் ஆர்மியாக படத்தினை காப்பாற்றியிருக்கிறார். ஒளிப்பதிவு ஆர்.டி.ராஜசேகர்.. இசை தமன்குமார். இயக்கியிருப்பவர் வி.செல்வா. இப்படம் நேற்று 30-ம் தேதி, வியாழக்கிழமை ரிலீஸாகியுள்ளது.
நினைத்தது யாரோ
தமிழ்ச் சினிமாவில் இயக்குநர்களிடையே தனித்த இடத்தைப் பிடித்திருக்கும் இயக்குநர் விக்ரமனின் நினைத்த்து யாரோ படமும் நேற்றைக்கு ரிலீஸாகியிருக்கிறது. புதுமுகங்களான ரஜத், நிமிஷா, கார்த்திக்யோகி, அசார் என்று புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தை அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் பி.ரமேஷ், டி.இம்மானுவேல் தயாரித்திருக்கிறார்கள். இசை பால்ராஜ். ஒளிப்பதிவு பிரதாப்.. விக்ரமன் ஸ்டைல் படங்களே இப்போது திரைக்கு வருவதில்லை என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு உண்டு.. இந்தப் படமும் நேற்று 30-ம் தேதி வியாழக்கிழமை ரிலீஸாகியுள்ளது.
ரம்மி
தற்போதைய ஹாட்டான ஹீரோவான விஜய்சேதுபதியின் அடுத்த படம் இது. இனிகோ பிரபாகர் இன்னொரு ஹீரோவா நடிச்சிருக்கார். இவர்களுடன் ஹீரோயின்களாக ஐஸ்வர்யா, காயத்ரி நடித்திருக்கின்றனர். ஸ்ரீவள்ளி ஸ்டூடியோ சார்பில் கே.குருநாதன், பி.ஏலப்பன், பாலகிருஷ்ணா ஆகியோர் தயாரிச்சிருக்காங்க. இமான் இசையமைச்சிருக்காரு. ஒளிப்பதிவு சி.பிரேம்குமார். எழுதி இயக்கியிருப்பவர் கே.பாலகிருஷ்ணன்.
நினைவில் நின்றவள்
ஸ்ரீசபரி மூவிஸ் சார்பில் மணிகண்டன், சித்ரா குமாரவேல் இணைந்து தயாரிச்சிருக்கும் படம் இது. நடிகர் எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின் சேகர்இதில் ஹீரோவாக நடித்திருக்கிறார். கீர்த்தி சாவ்லா ஹீரோயின். இசை டி.இமான். எழுதி இயக்கியவர் அகஸ்திய பாரதி. இவருடைய முதல் படமான இத்திரைப்படம் வெளிவருவதற்குள் இந்த இயக்குநர் கேன்சர் நோயால் காலமானது வருந்தத்தக்கது.
இது தவிர கே.ஜே.எஸ். இயக்கத்தில் மாலை நேரப் பூக்கள் என்ற சின்ன பட்ஜெட் நேரடி தமிழ்ப் படமும், பலான காட்சிகளுக்காகவே எதிர்பார்க்கப்பட்டிருக்கும் பி.ஏ. பாஸ் என்ற இந்தி படமும் தமிழுக்கு டப்பிங் ஆகி வந்திருக்கிறது..!