11-04-2014 – வெள்ளிக்கிழமை – இன்றைய ரிலீஸ் படங்கள்
1. நான் சிகப்பு மனிதன்
யு டிவியும், விஷால் பிலிம் பேக்டரியும் இணைந்து தயாரித்திருக்கும் படம். தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர் படங்களை அடுத்து இயக்குநர் திரு, இயக்கியிருக்கும் படம். விஷால், லட்சுமி மேனன் நடித்திருக்கிறார்கள். இந்த வார படங்களில் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கும் படம் இதுதான்..!
2. காந்தர்வன்
தாமரை மூவிஸ் மற்றும் சவுத் இண்டியன் புரொடெக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை சலங்கை துரை இயக்கியிருக்கிறார். இவர் இதற்கு முன்பு காத்தவராயன் படத்தை இயக்கியவர். கதிர் என்ற புதுமுகம் ஹீரோ. மலையாள நடிகை ஹனிரோஸ் ஹீரோயினாக நடித்திருக்கிறார். அனில் கே.சேகர் ஒளிப்பதிவு செய்ய அலெக்ஸ்பால் இசையமைத்திருக்கிறார்.
3. ஆண்டவா காப்பாத்து
இப்படியொரு டைட்டிலையே இன்றைக்குத்தான் நாம் பார்க்கிறோம். சறுக்கி விழாதே, சாதித்து வாழ் என்கிற வார்த்தையே கேப்ஷனாக வைத்திருக்கிறார்கள். எல்.எம்.எல். கிரியேஷன்ஸ் தயாரிக்க.. எல்.வெபின் என்பவர் எழுதி, இயக்கியிருக்கிறார்.
4. சபோடேஜ் -ஆங்கில டப்பிங்
அர்னால்டு நடித்து சென்ற மாதம் வெளிவந்த ஆங்கிலத் திரைப்படம். தமிழில் ‘யாருக்கும் சளைக்காதவன்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸாகிறது. ஹாலிவுட்டில் படம் அட்டர் பிளாப்.. இங்கே எப்படியோ..?