full screen background image

கோவை, மதுரையில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசைக் கச்சேரி..!.

கோவை, மதுரையில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசைக் கச்சேரி..!.

தனது இசை வளத்தால் உலகெங்கும் உள்ள இள வயது இசை ரசிகர்களை கட்டி போட்டிருக்கும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மீண்டும் இசைக் கச்சேரியை துவக்குகிறார்,

பல்வேறு  பாடகர்கள், மற்றும் இசை கலைஞர்கள் என்று ஒரு பெரிய இசைக் குழுவுடன் கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார்.

யுவன் ஏற்கெனவே சென்னை, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் இது போன்று இசை நிகழ்சிகளை நடத்தியிருக்கிறார். மேலும் துபாய், கோலாலம்பூர், சிட்னி, அமெரிக்காவிலும் தன்னுடைய இசைக் கச்சேரிகளை நடத்தி வெற்றி பெற்றிருக்கிறார்.

இப்போது மீண்டும் தமிழகத்தின் மற்ற முக்கிய நகரங்களான கோவையிலும், மதுரையிலும் தனது இசை கச்சேரியை நடத்தவுள்ளார்.

கோவையில் வருகின்ற  ஜனவரி 23-ம் தேதி, கோவை ஹிந்துஸ்தான் கல்லூரி வளாகத்திலும்,  ஜனவரி 26-ம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்திலும் நடக்க உள்ளது.

இந்த இசைக் கச்சேரியில் யுவனுடன் இதுவரை பணியாற்றிய இயக்குனர்களுடன், இசைஞானி இளையராஜாவும் கலந்துக் கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  

Our Score