உலக நாடுகளில் பல நிகழ்ச்சிகளின் மூலம் இசை ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தச் செய்திருக்கும் ஆஸ்கர் நாயகன் A.R. ரகுமானின் இசை நிகழ்ச்சி மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடைபெறவிருக்கிறது. இந்த இசை நிகழ்ச்சிக்கு ‘நெஞ்சே எழு’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
வரும் ஜனவரி மாதம் 16-ம் தேதி சென்னையிலும், ஜனவரி 23-ம் தேதி கோவையிலும் இந்த இசை நிகழ்ச்சி பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது என இந்த இசை நிகழ்ச்சியை நடத்தப் போகும் Noise அண்ட் Grains எண்டர்டைன்மெண்ட் நிறுவனத்தினர் அறிவித்து உள்ளனர்.
“இந்த அறிவிப்பு வந்த சில நொடிகளில் சமூக வலைத்தளங்களில் இந்த அறிவிப்பு ஏற்படுத்தி உள்ள எதிர்ப்பார்ப்பு, நிகழ்ச்சியின் மேல் உள்ள எதிர்ப்பார்ப்பை கூட்டுகிறது. இந்தத் தருணத்தில் எங்களது நிறுவனத்துக்கு ஆதரவும், ஊக்கமும் தரும் ஏ.ஆர்.ரகுமான் சாருக்கும் ஏ.கே. ஆர். Events Inc நிறுவனத்தாருக்கும் மனமார்ந்த நன்றி…” என்றார்கள் ‘Noise and Grains’ நிறுவனத்தினர்.