full screen background image

தற்கொலை எண்ணத்தை மாற்றும் கதையைச் சொல்லும் ‘யோசி’ படம் நாளை வெளியாகிறது!

தற்கொலை எண்ணத்தை மாற்றும் கதையைச் சொல்லும் ‘யோசி’ படம் நாளை வெளியாகிறது!

J&A Prime Productions தயாரிப்பில் உருவாகியுள்ள ‘யோசி’ படம் நாளை வெளியாகிறது.

இந்தப் படத்தில் அபய் சங்கர் (ஹீரோ), ரேவதி வெங்கட் (கதாநாயகி), ஊர்வசி, கலாரஞ்சனி, அர்ச்சனா கௌதம், சாம் ஜீவன், ஏ.எல்.சரண், பார்கவ் சூர்யா, மயூரன், அச்சு மாளவிகா, கிருஷ்ணா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

தயாரிப்பு நிறுவனம் – j & A பிரைம் புரொடக்ஷன்ஸ், வெளியீடு – j & A பிரைம் புரொடக்ஷன்ஸ்  & A V I மூவி மேக்கர்ஸ், ஸ்க்ரிப்ட் & இயக்கம் – ஸ்டீபன் எம்.ஜோசப், இசை – ராபின் ராஜ்சேகர், கே,குமார், வி.அருண், ஏ.எஸ்.விஜய், பாடியவர்கள் – கார்த்திக், கே.ஜே. அய்யனார், ஜெகதீஷ் குமார், மோனிஷா சௌந்தரராஜன், பாடலாசிரியர் – ராக்சகன், வி.அருண், இசை உரிமை – MRT இசை, பின்னணி இசை – பிரான்செஸ்கோ ட்ரெஸ்கா (இத்தாலி), ஒளிப்பதிவு – ஆறுமுகம், சண்டை இயக்கம் – ஜாக்கி ஜான்சன், நடன இயக்கம் – ஜெய் & டயானா, படத் தொகுப்பு – ரோஷன் பிரதாப் ஜி – ரதீஷ் மோகனன், உடைகள் – டயானா, ஒப்பனை – கலைவாணி, பத்திரிகை தொடர்பு – A.ஜான், சுவரொட்டி வடிவமைப்பு – நௌஃபல் குட்டிபென்சில், தலைப்பு வடிவமைப்பு – ரிதன் விவேக், பிரம்மன்.

நீட் தேர்வை எதிர்கொள்ள பயந்து தற்கொலை முடிவு எடுக்கும் மாணவன் ஒருவன்  மலைப் பகுதிக்கு சென்று அங்கிருந்து தற்கொலை செய்ய முயற்சிக்கிறான். முயற்சி தோல்வியடைய அந்த காட்டில் இருந்து தப்பி உயிர் பிழைக்க மிகப் பெரிய உயிர் போராட்டத்தில் இறங்குகிறான். அவனுக்கு என்ன ஆபத்து நேர்ந்தது, அவற்றிலிருந்து அந்த மாணவனால் தப்பிக்க முடிந்ததா என்பதை மையப்படுத்தி விறுவிறு திரில்லர் படமாக இது உருவாகியுள்ளது.

கடந்த 40 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் நடிப்பில் பல சாதனைகளை செய்த நடிகை ஊர்வசியின் நெருங்கிய உறவினரான அபய் சங்கர்தான் இதில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.  இவருக்காக மட்டுமல்ல, கதையால் ஈர்க்கப்பட்டும் இந்த படத்தில் ஊர்வசியும் அவரது சகோதரி கலாரஞ்சனியும் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Our Score