அறிமுக இயக்குநர் சுவாமிராஜ் இயக்கி வரும் ‘யோக்கியன் வாரான்; செம்ப தூக்கி உள்ள வை’ படத்தில் இடம் பெறவிருக்கும் ஒரு பாடல், வடபழனியில் உள்ள ஒரு ரிக்கார்டிங் தியேட்டரில் இன்று பதிவு செய்யப்பட்டது.
“அன்பு கெட்ட பொண்ணு மேல ஆசை உனக்கு எதுக்குடா..
அவசரமா எதையும் செய்யும் பொண்ண தூர ஒதுக்குடா..
இதயம் இல்லா பொண்ண நெனச்சி ஏங்குறத நிறுத்துடா..
பாதை மாறி போகும் மனச பக்குவமா திருத்துடா..”
என்று துவங்கும் இந்தப் பாடலை பாடலாசிரியர் தவசிமணி இயற்றியுள்ளார். இசையமைப்பாளர் ஆதிஷ் உத்ரியன் இசையமைத்த இந்தப் பாடலை கானா பாலா பாடியுள்ளார். பாடலும், மெட்டும் சிறப்பாக அமைந்துள்ளதாக இசையமைப்பாளர் ஆதிஷ் உத்ரியனை வெகுவாக பாராட்டினார் கானா பாலா.
உடன் நடிகர் சுப்புராஜ், இயக்குநர் சுவாமிராஜ், இசையமைப்பாளர் ஆதிஷ் உத்ரியன் ஆகியோர் இருந்தனர்.









