விஜய்க்கு அடுத்தப் படத்தில் கம்பெனி கொடுக்கப் போவது யோகிபாபுவா..?

விஜய்க்கு அடுத்தப் படத்தில் கம்பெனி கொடுக்கப் போவது யோகிபாபுவா..?

மாஸ்டர்’ படம் பற்றிய பேச்சு ஓய்ந்து போயிருந்தாலும் தியேட்டர்களில் ‘மாஸ்டர்’ படம் இப்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது. செகண்ட் ஷெட்யூலாக ஒவ்வொரு ஊரிலும் இரண்டாம் தர தியேட்டர்களில் திரும்பவும் ‘மாஸ்டர்’ படத்தை இப்போது ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.

புத்தம் புதிய படத்திற்கு வரும் கூட்டத்தைவிடவும் ‘மாஸ்டர்’ படத்திற்கு இப்போதும் அதிகமான கூட்டமே வருவதால் மாஸ்டர் நின்று விளையாடுகிறது என்று சந்தோஷமாகச் சொல்கிறார்கள் தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தர்களும்.

இந்த சந்தோஷத்துடன் விஜய்யின் 65-வது படத்துக்கான வேலைகளும் துவங்கிவிட்டன. இந்தப் படத்தை இயக்கப் போகும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இந்த விஜய் படத்தில் நடிக்கப் போகும் நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் வேலையில் மும்முரமாக இருக்கிறார்.

இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் யோகிபாபு இருப்பதாகத் தகவல். நெல்சன் இயக்கிய முதல் படமான ‘கோலமாவு கோகிலா’ படத்தின் வெற்றிக்குப் பெரும் காரணமாக இருந்த யோகிபாபு இந்தப் புதிய விஜய் படத்தில் விஜய்க்கு பக்கபலமாக கடைசிவரையிலும் வரக் கூடிய அளவுக்கான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்கிறார்கள்.

இது நடந்தேறினால் யோகிபாபுவின் கேரியர் மேலும் உயரப் போவது உறுதி..!

Our Score