தமிழ் சினிமாவின் திசை வழியில் இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்சன்ஸ்’ நிறுவனம் ஒரு புதிய அத்தியாயம். அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிப்பதோடு அல்லாமல் தரமான, அழுத்தமான படைப்புகளை தருவதிலும் மிகுந்த கவனமுடன் செயல்பட்டு வருகிறது.
‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ ஆகிய இரண்டு படங்களின் வெற்றியினைத் தொடர்ந்து மூன்றாவதாக ‘ரைட்டர்’ என்ற படம் தயாரிப்பில் இருக்கும் நிலையில், தற்போது யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கும் படத்தை, யாழி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது நீலம் புரொடக்ஷன்ஸ்.
இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷான் இயக்குகிறார். ‘பொம்மை நாயகி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியிருக்கிறது.
யோகி பாபுவோடு இணைந்து சுபத்ரா, ஜி.எம்.குமார், ஹரி, ‘விஜய் டிவி’ ஜெயச்சந்திரன். உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – அதிசயராஜ், இசை- சுந்தரமூர்த்தி, படத் தொகுப்பு – செல்வா R.K., கலை இயக்கம் – ஜெயரகு, பாடல்கள்- கபிலன், அறிவு, இணை தயாரிப்பு – யாழி பிலிம்ஸ், வேலவன், லெமுவேல், தயாரிப்பு- பா.இரஞ்சித், மக்கள் தொடர்பு – குணா.
இன்றைய முதல் நாள் படப்பிடிப்பில் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் கலந்துகொண்டு படப்பிடிப்பை துவங்கி வைத்திருக்கிறார்.



