full screen background image

‘எவனும் புத்தனில்லை’ படத்திற்காக சினேகன் நடித்த பாடல் காட்சி..!

‘எவனும் புத்தனில்லை’ படத்திற்காக சினேகன் நடித்த பாடல் காட்சி..!

வி சினிமா குளோபல் நெட்வொர்க்ஸ்  பட நிறுவனம் அதிகப்  பொருட் செலவில் தயாரித்துள்ள படம் ‘எவனும் புத்தனில்லை.’

இந்த படத்தில் நபி நந்தி கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக ஷரத் என்ற புதுமுகம் நடிக்கிறார். நாயகிகளாக நிகாரிகா, சுவாசிகா இருவரும் நடிக்கிறார்கள். ஒரே ஒரு பாடல் காட்சியில் பூனம் கவுர் நடித்திருக்கிறார்.

மற்றும் சங்கிலி முருகன், வேல ராமமூர்த்தி, நான் கடவுள் ராஜேந்திரன், எம்.கார்த்திகேயன், எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, மாரிமுத்து, பசங்க சிவகுமார்,  K.T.S.பாஸ்கரன், முரு, ஆறு, மலேசியா ராதா சரஸ்வதி, THR. ராகா மாறன், அற்புதன் விஜய், ஜோதி, தர்ஷினி, எலிசபெத் ஆகியோரும் நடித்துள்ளனர். ஒரே ஒரு பாடல் காட்சியில் சினேகன் நடித்துள்ளார்.

வசனம் – T.S.சுரேஷ்குமார், பாடல்கள் – சினேகன், கலை – A.பழனிவேல், ஒளிப்பதிவு –  ராஜா. C.சேகர், பாலகிருஷ்ணன், இசை – மரியா மனோகர், நடனம்- அசோக் ராஜா, சங்கர், சண்டை பயிற்சி – அன்பறிவு, மிராக்கில் மைக்கேல், படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், இணை தயாரிப்பு – K.T.S.பாஸ்கரன், K.சுப்பிரமணியம், I.ஜோசப் ஜெய்சிங், M.கார்த்திகேயன், V.C.சூரியன், எழுத்து, இயக்கம் – எஸ்.விஜயசேகரன்.

படம் பற்றி இயக்குநர் எஸ்.விஜயசேகரன் பேசும்போது, “இந்த உலகத்தில் பெரும்பாலான உயிரினங்கள் தன் இனத்தை தானே வேட்டையாடி அழிப்பதில்லை ஆனால் மனித இனத்தில் ஆணுக்குப் பெண் சளைத்தவள் இல்லை என்பது போல் இரு பாலினமும் தன் சுயநலத்திற்காக ஒருவரை ஒருவர் வேட்டையாடி வருகிறார்கள்.

நாகரீகம் என்ற பெயரில் இது போன்ற சுயநலமிக்க மனிதக் கூட்டங்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு எதிராக 6000 அடி  உயர மலைக் கிராமத்தில் வெள்ளந்தியாக வாழ்ந்த ஒரு இளைஞன் தனது நண்பனான மருத்துவக் கல்லூரி மாணவனுடன் இணைந்து நடத்தும் யுத்தமே இந்த ‘எவனும் புத்தனில்லை’ திரைப்படம்.

இந்தப் படத்திற்காக பாடலாசிரியரும், நடிகருமான சினேகன் எழுதி அவரே நடித்த பாடல் காட்சி ஒன்று மலேசியா, சென்னை போன்ற இடங்களில் மிகப் பிரமாண்டமான செலவில் படமாக்கப்பட்டது.

‘எதுவும் தப்பில்லை, எவனும் புத்தனில்லை’ என்று துவங்கும் இந்தப் பாடல் காட்சி இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களை குறி வைத்து உருவாக்கப்பட்டது.

இந்தப் பாடலை L.R.ஈஸ்வரி மற்றும் மலேசிய பாப் பாடகர்களான ‘மாமா மாப்ள’ K16, HWING, MURU, AARU,THR RAAGA MARAN ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்

இந்தப் பாடல் காட்சியில் 200 நடனக் கலைஞர்கள் பங்கேற்றனர். மலேசியாவிலும், சென்னையிலும் மிகப் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கப்பட்டது...” என்றார்.

Our Score