full screen background image

‘எங் மங் சங்’ படத்திற்காக சீனாவில் குங்பூ சண்டை போட்ட பிரபுதேவா..!

‘எங் மங் சங்’ படத்திற்காக சீனாவில் குங்பூ சண்டை போட்ட பிரபுதேவா..!

வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர்கள் கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் இருவரும் இணைந்து அதிக பொருட்செலவில் தயாரித்து வரும் திரைப்படம் ‘எங் மங் சங்.’

இந்த படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். மற்றும் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி,  சித்ரா லட்சுமணன், ‘கும்கி’ அஸ்வின்,  ‘காளி’ வெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா இவர்களுடன் ‘பாகுபலி’ படத்தில் வில்லனாக நடித்திருந்த பிரபாகர் இந்தப் படத்திலும் வில்லன் வேடம் ஏற்றுள்ளார்.

ஒளிப்பதிவு – R.P.குருதேவ், படத் தொகுப்பு – பாசில், நிரஞ்சன், பாடல்கள்  -பிரபுதேவா, மு.ரவிக்குமார், இசை – அம்ரீஷ், நடனம் – ஸ்ரீதர், நோபல், சண்டை பயிற்சி – சில்வா, தயாரிப்பு – கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – அர்ஜுன்.M.S.

1980-ம் வருட காலக்கட்டத்தில் நடப்பது மாதிரியான கதைக் களத்தைக் கொண்ட படமாக இந்த எங் மங் சங் திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது.

பிரபுதேவா இந்த படத்தில் குங்பூ மாஸ்டராக நடிக்கிறார். சண்டைகளை கற்று கொடுக்கும் தொழிலை செய்யும் கூட்டத்தின் தலைவனாக ‘பாகுபலி’ வில்லன் பிரபாகர் நடிக்கிறார்.

குங்பூ  மற்றும் சைனீஸ் ஸ்டண்ட் பற்றிய காட்சிகள் கொண்ட படம் என்பதால் அதிக சிரத்தை எடுத்து படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நாயகன் பிரபுதேவா, பாகுபலி வில்லன் பிரபாகருடன் மோதும் சண்டை காட்சிகள் சென்னை அருகே பொழிச்சலூர் காட்டு பகுதியில் ஏழு நாட்கள் படமாக்கப்பட்டது. இந்தப் படப்பிடிப்பில் ஆயிரக்கணக்கான நடிகர், நடிகைகள் பங்கெடுக்க மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டது.

கும்பகோணம், பொள்ளாச்சி ஆகிய இடங்களைத் தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா போன்ற இடங்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்தார்கள்.

அதைத் தொடர்ந்து சீனாவில் டெங் லெங் என்ற இடத்தில் ஏராளமான செலவில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தினார்கள். பிரபுதேவா வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சிகளை சண்டை இயக்குநர் சில்வாவின் இயக்கத்தில் படமாக்கப்பட்டது.

படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

Our Score