தனது சீரிய முயற்சியாலும், அபாரமான திறமையாலும் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த அல்லு அர்ஜுன், ‘என் பேரு சூர்யா என் வீடு இந்தியா’ திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர உள்ளார்.
நாளை, மே 4-ம் தேதி வெளி வர உள்ள இந்த படத்தை திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் இடையே கடும் போட்டி நிலவியது.
“அல்லு அர்ஜுன் படங்கள் எப்போதும் அனல் பறக்கும். திரை அரங்குகள் திரைத் துறையினரின் வேலைநிறுத்தத்திற்கு பிறகு வெகுஜன மக்களை கவரும் ஒரு ஜனரஞ்சகமான படத்தை தேடி வந்த. மக்களை இந்த “என் பேரு சூர்யா என் வீடு இந்தியா” திரைப்படம் நிச்சயமாக மகிழ்விக்கும்..
இதுவரையிலும் தமிழ்நாட்டில் மட்டும் 207 காட்சிகளை உறுதி செய்து இருக்கிறோம். தமிழ் ரசிகர்கள் இந்த படத்துக்கு பெரிய வரவேற்பு தருவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை…” என்கிறார் இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிடும் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனத்தின் தலைவரான பி. சக்திவேலன்.