full screen background image

ஒரு பாடல் தவிர்த்து ‘யசோதா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது..!

ஒரு பாடல் தவிர்த்து ‘யசோதா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது..!

சமந்தா நடிப்பில் உருவாகி வரும் ‘யசோதா’ படத்தின் ஃபர்ஸ்ட் க்ளிம்ப்ஸே இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், படக் குழு தற்போது ஒரு பாடலைத் தவிர்த்து, முழு படப்பிடிப்பையும் முடித்துள்ளது.

தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது Sridevi Movies தயாரிப்பு நிறுவனம் சார்பில் 14-வது தயாரிப்பாக இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்க வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா ஷர்மா மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர்.

இசை – மணி சர்மா, வசனம் – புலகம் சின்னராயனா, Dr. சல்லா பாக்யலட்சுமி, பாடல்கள் – ராமஜோகையா சாஸ்திரி கிரியேட்டிவ் டைரக்டர்: ஹேமம்பர் ஜாஸ்தி, ஒளிப்பதிவு – M.சுகுமார், கலை இயக்கம் –  அசோக், சண்டை பயிற்சி இயக்கம் –  வெங்கட், படத் தொகுப்பு – மார்த்தாண்டன், K.வெங்கடேஷ், லைன் புரடியூசர் – வித்யா சிவலெங்கா, இணை தயாரிப்பாளர் – சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, இயக்கம் – ஹரி – ஹரிஷ், தயாரிப்பாளர் – சிவலெங்கா கிருஷ்ண பிரசாத், பேனர் – Sridevi Movies.

திறமையான இயக்குநர் கூட்டணியான ஹரி-ஹரிஷ் இணைந்து இப்படத்தை இயக்குகிறார்கள்.

இந்த யசோதா படம் பற்றி தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் பேசும்போது, “இப்படத்தை எந்த சமரசமும் இல்லாமல் மிகப் பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறோம். இதுவரை 100 நாட்கள் கடந்து படப்பிடிப்பு நடந்துள்ளது. இன்னும் ஓர் பாடல் தவிர்த்து படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிந்துவிட்டது.

ஒரு பாடலின் படப்பிடிப்பிற்காக சிஜி வேலைகள் ஏற்கனவே நடந்து வருகிறது. இம்மாதம் 15-ம் தேதி முதல் டப்பிங் பணிகள் தொடங்கும் நிலையில், மற்ற மொழிகளுக்கான டப்பிங் பணியை ஒரே நேரத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

மேலும், இந்த பான்-இந்திய படத்தை பெரிய அளவில் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க முடிவு செய்துள்ளோம். படத்தை தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டு வருகிறோம்.

இந்த எட்ஜ்-ஆஃப்  சீட் த்ரில்லர் உலகம் முழுவதும் ரிலீஸுக்குத் தயாராகி விட்டது. சமந்தா இப்படத்தில் மிக அற்புதமாக நடித்துள்ளார் அதிலும், குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில், முழு அர்ப்பணிப்பையும் தந்து அசத்தியுள்ளார். இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும்…” என்றார்.

Our Score