full screen background image

ஸ்வாதியும், கிருஷ்ணாவும் பின்னிப் பிணைந்திருக்கும் ‘யாக்கை’..!

ஸ்வாதியும், கிருஷ்ணாவும் பின்னிப் பிணைந்திருக்கும் ‘யாக்கை’..!

இயக்குநர் குழந்தை வேலப்பனின் இயக்கத்தில், ‘பிரிம் பிச்சர்ஸ்’ முத்துக்குமரன் தயாரித்துள்ள ‘யாக்கை’ படத்தின் இசை இன்று வெளியிடப்பட்டது.

img-92  

நடிகர் கிருஷ்ணா மற்றும் நடிகை ஸ்வாதி ரெட்டி இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘யாக்கை’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, இன்று சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் விமரிசையாக நடைபெற்றது. மனதை வருடும் இசையால் இசைப் பிரியர்களை தன்  பிடியில் வைத்திருக்கும் யுவன் ஷங்கர் ராஜா இந்த ‘யாக்கை’ படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

img-32

முதலாவதாக படத்தின் டிரெயிலரும் இரண்டு பாடல்களும் திரையிடப்பட்டன. டிரெயிலரை பார்த்தபோது திரில்லர் கலந்த கமர்ஷியல் படமாக இது உருவாகியிருப்பதை உணர முடிந்தது. மருத்துவம், மருந்து நிறுவனங்கள், அரசுகள், போலீஸ் சம்பந்தப்பட்ட கதை என்பதும் தெரிந்தது.

பாடல் காட்சிகளில் ஸ்வாதியும், கிருஷ்ணாவும் மிக, மிக அதிகமான நெருக்கம் காட்டியிருக்கிறார்கள். ஒரு பாடல் காட்சியில் லிப் கிஸ்ஸும் உண்டு. ஸோ.. ஸ்வாதி ரெட்டி ஒரு முடிவோடுதான் இருக்கிறார் போலும்..!

இந்த விழாவில் இயக்குநர்கள் கரு.பழனியப்பன், இயக்குநர் விஷ்ணுவர்த்தன் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். மேலும், தயாரிப்பாளர் ‘பட்டியல்’ சேகர், தயாரிப்பாளர் சங்கத்தின் துணை தலைவர் பி.எல்.தேனப்பன், இர்பான், இயக்குநர் பெரோஸ், ‘ஜாஸ்’ கண்ணன், ‘DIVO’ மியூசிக் ஷாஹிர், இயக்குநர் இளன், இயக்குநர் ராஜாராமன், நடிகர் சரவணன், தயாரிப்பாளர் ‘பிரிம் பிச்சர்ஸ்’ முத்துக்குமரன், இயக்குநர் குழந்தை வேலப்பன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் சத்யா பொன்மார், படத் தொகுப்பாளர் சாபு ஜோசப், கிருஷ்ணா சுவாதி, ‘ஜோக்கர்’ புகழ் குரு சோமசுந்தரம், ‘மெட்ராஸ் ஜானி’ ஹரி கிருஷ்ணன், சிங்கம் புலி, மாரிமுத்து என ஒட்டு மொத்த ‘யாக்கை’  படத்தின் படக் குழுவினரும்  கலந்து கொண்டார்கள்.

விழாவில் பேசிய இயக்குநர் கரு.பழனியப்பன், “மனித உடலுக்கு மறு பெயர்தான் ‘யாக்கை’. இத்தகைய பழமையான தமிழ் சொல்லை தலைப்பாக கொண்டுள்ள ‘யாக்கை’ படத்தின் கதையும் வலுவானதாகதான் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

தன்னுடைய முதல் படத்திலேயே இது போன்ற தனித்துவமான கதை களத்தை தேர்வு செய்த ‘பிரிம் பிச்சர்ஸ்’ முத்துக்குமரன் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்….” என்றார்.

img-42

இயக்குநர் விஷ்ணுவர்த்தன் பேசும்போது, “ஒவ்வொரு திரைப்படத்திலும்  தன்னை ஒரு தரமான நடிகராக மென்மேலும் உயர்த்தி கொண்டே போகும் கிருஷ்ணாவை பார்க்கும் பொழுது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. ‘யாக்கை’ படக் குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்…” என்று உற்சாகமாக கூறினார்.

img-26 

பலத்த கை தட்டலோடு மைக்கைப் பிடித்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, “இப்போது என் மனதோடு ஒட்டியிருக்கும் திரைப்படம் ‘யாக்கை’. எங்களுடைய ‘யு-1 ரெகார்டஸ்’ நிறுவனம் ஆரம்பித்த பிறகு, நான் இசையமைத்த முதல் திரைப்படம் ‘யாக்கை’ என்பதே அதற்கு முக்கிய காரணம். இது போன்ற ஒரு உற்சாகமான  இளம் படக் குழுவினருடன் பணியாற்றுவது, எனக்கு புத்துணர்ச்சியை தந்திருக்கிறது…” என்றார்.

Our Score