full screen background image

ஆபாசப் படவுலகத்தை தோலுரித்துக் காட்டும் ‘X வீடியோஸ்’ திரைப்படம்

ஆபாசப் படவுலகத்தை தோலுரித்துக் காட்டும் ‘X வீடியோஸ்’ திரைப்படம்

கலர் ஷேடோஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் சஜோ சுந்தர் இயக்கியுள்ள படம் ‘X வீடியோஸ்’. 

இயக்குனர் சஜோ சுந்தர். இவர் இயக்குநர் ஹரியிடம் ஐந்து படங்களில் உதவி இயக்குநராக வேலை பார்த்தவர். பிரகாஷ்ராஜ் இயக்கிய ‘தோனி’, ‘உன் சமயலறையில்’ போன்ற படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்தவர்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மதியம் ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் சஜோசுந்தர் பேசும்போது, “என்னுடைய முதல் படத்தை ஒரு கமர்ஷியல் படமாகத்தான் இயக்கவேண்டும் என நினைத்திருந்தேன்.. ஆனால் இப்போது ‘X வீடியோஸ்’ என்கிற படத்தை இயக்கியுள்ளேன். இதை கிளுகிளுப்பான படம் என்று நினைத்துவிட வேண்டாம். இது விறுவிறுப்பான த்ரில்லர் படம். சமூக விழிப்புணர்வுடன் கொஞ்சம் நையாண்டி கலந்து சொல்லியிருக்கிறேன்.

director sujo sundar

இது இளம் பெண்களுக்கு விழிப்புணர்வு தரும் விதமாக எடுக்கப்பட்ட படம். குறிப்பாக கல்லூரி பெண்களை, குடும்ப பெண்களை இணையதள ஆபத்தில் இருந்து அவர்களை பாதுகாக்கும் பொருட்டு எடுக்கப்பட்டுள்ள படம் இது. சமூக விழிப்புணர்வு நோக்கத்தில்தான்  எடுத்திருக்கிறேன்.

தொழில் நுட்பம் இன்று எந்த அளவுக்கு நம்மை அபாய கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்பதை எச்சரிக்கும்படி ஒரு படம் தேவை என்பதை உணர்ந்து இப்படத்தை எடுத்திருக்கிறேன்.

மொபைலில் ஆபாசப் படங்களை ரெகுலராக பார்க்கும் எனது நண்பர் ஒருவர் இருக்கிறார். அவரது மனைவியின் படமே ஒரு நாள் இதுபோன்ற இணையதளத்தில் இடம் பெற்றிருந்ததை பார்த்து அதிர்ந்தேன்.. அவருக்கே தெரியாமல் படம் பிடிக்கப்பட்ட இந்த வீடியோ எப்படி இணையதளத்துக்குள் வந்தது..? யாரால் படம் பிடிக்கப்பட்டது என்கிற ஆராய்ச்சியில் இறங்கியபோது பல அதிர்ச்சி கலந்த உண்மைகள் தெரியவந்தது.

நாம் ஆண்ட்ராய்டு மொபைல்களில் இலவசமாக சில ஆப்ஸ்கள் டவுன்லோடு செய்கிறோமே..? எப்படி அவன் நமக்கு இலவசமாக தருகிறான். அதனால் அவனுக்கு என்ன பிரயோஜனம்..? விஷயம் இருக்கிறது.

நாம் டவுன்லோடு செய்யும் பல ஆப்ஸ்கள் இந்தக் ஆபாச இணைய தளங்களுடன் கூட்டணியில் இருப்பவைதான். அதனால் அந்த ஆப்ஸ்களை டவுன்லோடு செய்துவிட்டால் நம் மொபைலில் உள்ள நமது அந்தரங்க வீடியோக்கள் ஏதாவது இருப்பின், அவற்றை கண்டுபிடித்து இந்த ஆபாச இணைய தளங்களுக்கு அவை அனுப்பி விடுகின்றன.

இதற்காக அந்த ஆபாச இணைய தளங்கள் இந்த ‘ஆப்ஸ்’களுக்கு பணம் கொடுக்கின்றன. இன்றைய இணையதள உலகமே முக்கால்வாசி இந்த ஆபாச இணைய தளங்கள் கொடுக்கும் பணத்தில்தான் இயங்கி வருகின்றன என்பது இன்னொரு அதிர்ச்சி கலந்த உண்மை.

அவ்வளவு ஏன்.. எங்கேயோ இருந்து கொண்டு உங்கள் மொபைலின் கேமராவை ஆபரேட் பண்ணும் அளவுக்கு டெக்னிகலாக இந்த கும்பல் வளர்ந்துவிட்டார்கள். தயவு செய்து செல்போனை உங்க பெட்ரூமில் வைக்காதீர்கள். பாத்ரூமிற்குள் கொண்டு போகாதீர்கள். நெருங்கியவர்களுடன் நெருக்கமாக இருக்கும் தருணங்களை வீடியோவாக எடுக்காதீர்கள்.

இந்த ஆபாச வீடியோக்களுக்கு பிறப்பு மட்டும்தான் உண்டு. இறப்பு என்பதே இல்லை. அதனால் இந்த ஆபாச இணையத் தளங்களை கட்டுப்படுத்துவது மற்றும் தடைசெய்வதற்கான ஒரு முயற்சியாகத்தான் இந்தப் படத்தை எடுத்துள்ளேன்.

விரைவில் இந்த ஆபாச இணையத் தளங்களை தடை செய்யச் சொல்லி நீதமன்றத்தில் வழக்கு தொடுக்கவும் இருக்கிறேன்.. இந்த ஆபாச இணையத் தளங்கள் பற்றிய உண்மையை தெரிந்தவர்கள் ஒரு சிலர் மட்டுமே.. தெரியாத அப்பாவி ஜனங்கள் பல பேர் இருக்கிறார்கள். அவர்களது கவனத்திற்கு இந்த ஆபத்தை பற்றி கொண்டு செல்வதற்காகவே இந்தப் படத்தை எடுத்துள்ளேன்.

மற்றவர்கள் போல நீங்களும் வியாபார சினிமாவை எடுத்து விட்டுப் போகலாமே என்று இப்போதும் எல்லாரும் கேட்கிறார்கள்.  ஆனால் இப்போது நான் சொல்கிறேன். இது ஆபாசமான படமல்ல.  ஆபாசமான உலகம் பற்றி நாகரிகமாகச் சொல்லியிருக்கிறோம்.

இன்று வரும் எத்தனையோ படங்களைக் குடும்பத்தோடு பார்க்க முடிவதில்லை. கூச்சப்படுகிற மாதிரி சங்கோஜப்படுகிற மாதிரி காட்சிகள் படத்தில் நிறையவே இருக்கும். இதைத்  தமிழிலும், இந்தியிலும் எடுத்திருக்கிறோம். சென்சாரில் ரிவைசிங் கமிட்டிக்கு போனபோது கமிட்டியில் இருந்த  பிரபல இந்தி  இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி படம் பார்த்து விட்டு துணிச்சலான முயற்சி, சமுதாயத்துக்குத் தேவையான படம் என்று பாராட்டினார்.

சமீபத்தில் அரசு பள்ளிகளில் சரியான கழிப்பறை வசதியின்றி மாணவிகள் தங்களது இயற்கை உபாதைகளை அடக்கிக்கொண்டு, அதனால் பல இன்னல்களுக்கும் உடல் நலக் குறைவுக்கும் ஆளாவதை பத்திரிக்கை ஒன்றில் படிக்க நேர்ந்தபோது, மிகவும் வேதனைப்பட்டேன். இந்தப் படத்தில் கிடைக்கும் லாபத்தைக்கொண்டு ஒரு அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் என்னால் இயன்ற அளவு அரசு பள்ளிகளில் கழிப்பறை கட்டிக் கொடுக்க தீர்மானித்துள்ளேன்..” என்றார் சஜோ சுந்தர்.

நிகழ்ச்சியில் தயாரிப்பு வடிவமைப்பாளர் அக்ஷயா பேசும்போது, “நான் நடிப்பிலிருந்து தயாரிப்புத் துறைக்கு வந்தவள். இது ஆண்கள் நிறைய பேர் பணியாற்றிய படக் குழு. சுற்றிலும் ஆண்கள் நடுவில் நான் மட்டும் பெண் என்று பணியாற்றினாலும் எனக்கு எந்த அசெளகரியமும் ஏற்படவில்லை. முழு சுதந்திரம் இருந்தது.. ” என்றார்.

IMG_5173

நாயகன் அபிநவ் பேசும்போது, “என்னை நடிக்கத் தேர்வு செய்யும் முன் இயக்குநர்  கண்டிப்பாக இருந்தார். நடிக்கத் தொடங்கிய பின் சுதந்திரமாக இயங்க முடிந்தது. இந்தப் படம் சமுதாயத்துக்கு  அவசியமான படம்..” என்றார்.

IMG_5189

இன்னொரு நாயகன் நிஜய் பேசும்போது, “ஒரு சவாலான விஷயத்தை  துணிச்சலாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். ” என்றார்.

IMG_5307

மற்றொரு நாயகன் ஷான் பேசும்போது, “படத்தில் நான் கதாநாயகன் அல்ல. இங்குள்ள எல்லாருமே கதாநாயகர்கள்தான். இந்தப் படத்தை எடுக்க இயக்குநர்  இந்த திரையுலகம், நண்பர்கள், குடும்பம்  என எல்லாவற்றையும் தாண்டித்தான் எடுக்க வேண்டியிருந்தது” என்றார்.

நடிகர் அஜய்ராஜ் பேசும்போது, “நான் பெங்களூரில் பிறந்து வளர்ந்து இப்போது சென்னையில் செட்டிலாகியிருக்கிறேன். ‘உத்தம வில்லன்’, ‘பொறியாளன்’, ‘தாயம்’ படங்களைத் தொடர்ந்து இது எனக்கு ஐந்தாவது படம். அடிப்படையில் நான் ஒரு தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். சமூகக் குற்றம்  பற்றி துணிச்சலாக  இப்படம் சொல்கிறது…” என்றார்.

actress aahiruthi singh

நாயகி ஆஹிருதி சிங் பேசும்போது, “இப்படத்தில்  நான் நடித்தது மறக்க முடியாத அனுபவம்..  மகிழ்ச்சியான அனுபவம்.  படக் குழுவுக்கு  என் நன்றி.” என்றார்.

IMG_5299

கலை இயக்குநர் கதிர் பேசும்போது, “சஜோ எனக்கு 15 ஆண்டு கால நண்பர். எதையும் துல்லியமாகப் பார்ப்பவர். இந்தக் கதையை என்னிடம் கூறியபோது நன்றாக இருந்தது. ஆனால் பயமாக இருந்தது. அவருக்காக படத்தில் நான் பணியாற்றினேன். இருந்தாலும் படத்தைக் காட்டிய பின்தான் என் பெயரைப் போட வேண்டும்  என்றேன். அவ்வளவு பயமுறுத்தியது இந்தப் படத்தின் கதை. ஆனால்  படம் பார்த்த பின் சமாதானமானேன். நாகரீகமாகவே எடுத்திருக்கிறார்…” என்று பாராட்டினார். 

Our Score