‘வாட்ச்மேன்’ படத்தினை பெரிதும் பாராட்டிய இயக்குநர் பாண்டிராஜ்

‘வாட்ச்மேன்’ படத்தினை பெரிதும் பாராட்டிய இயக்குநர் பாண்டிராஜ்

ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படம் ‘வாட்ச்மேன்’. இந்தப் படத்தில் இவருடன்  யோகிபாபு, சுமன், ராஜ் அருண் மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும், கோல்டன் ரெட்ரீவர் வகையை சேர்ந்த நாய் ஒன்றும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளது. 

இத்திரைப்படத்தை டபுள் மீனிங் புரொடக்சன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம் தயாரித்துள்ளார். 

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.  காட்சிகளால் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் நிரவ் சர்மா மற்றும் சரவணன் ராமசாமி இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். பாடல் வரிகளை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். ஆண்டனி படத் தொகுப்பு செய்துள்ளார், கலை இயக்குநர் ராஜேஷ் கலை இயக்கம் செய்துள்ளார்.  மனோகர் வர்மா சண்டை காட்சிகளை அமைத்துள்ளார். இயக்குநர் விஜய் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.

தற்போது திரைக்கு வரத் தயாராக இருக்கும் இந்த ‘வாட்ச்மேன்’ திரைப்படத்தினை சமீபத்தில் பார்த்த இயக்குநர் பாண்டிராஜ். தனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும்  படக் குழுவினருக்குத் தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் பாண்டிராஜ் ‘வாட்ச்மேன்’ படம் பற்றிப் பேசுகையில், “இயக்குநர் விஜய்யின் ‘வாட்ச்மேன்’ திரைப்படம், த்ரில்லர் மற்றும் நகைச்சுவையின் கலவையாக இருந்தது. ஒவ்வொரு காட்சியையும்  அனுபவித்து பார்த்தேன். 

திரைக்கதை மிகவும் சுவாரஸ்யமாகவும், எதிர்பாராத ஆச்சரியமான திருப்பங்களும் நிரைந்திருந்தது. ஜி.வி.பிரகாஷ் மற்றும் யோகிபாபு இருவரும் திறம்பட நடித்துள்ளனர்.  குறிப்பாக  நாய்களின் சம்பந்தப்பட்ட காட்சிகளை விரும்பி பார்த்தேன்.  தொழில் நுட்ப குழு சிறப்பாக பணி புரிந்துள்ளனர்,  மேலும் படத் தொகுப்பு, ஒளிப்பதிவு மற்றும் ரீ-ரெக்கார்டிங் அனைத்தும் திரைப்படத்தை மெருகேற்றியுள்ளது…” என கூறினார். 

இயக்குநர் விஜய் கூறுகையில்,  “இயக்குநர் பாண்டிராஜ் குடும்ப பார்வையாளர்களை தனது தொடர்ச்சியான படங்களின் மூலம் ஈர்த்தவர்.  அத்தகைய இயக்குநரிடமிருந்து பாராட்டுகளை பெற்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

எங்களுடைய ‘வாட்ச்மேன்’ திரைப்படத்திற்கு அவரிடமிருந்து கிடைத்த புகழாரம், எங்களது உழைப்புக்குக் கிடைத்த பரிசாகவே நாங்கள் கருதுகிறோம்.

இது ‘வாட்ச்மேன்’ குழுவினராகிய ஜி.வி.பிரகாஷ், யோகிபாபு,  மேலும் அனைத்து தொழில் நுட்பத் துறையினரும் சிறப்பான பணி செய்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளனர்.” என்றார் சந்தோஷத்துடன்..!

இந்தப் படம் வரும் ஏப்ரல் 12-ம் தேதியன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

Our Score